

உலகக் கோப்பைப் போட்டியில் நாளை இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகள், அதற்கு செக் வைக்கும் முயற்சியில் இந்திய அணியின் ஆட்டம், பும்ராவின் பந்துவீச்சு, கோலியின் பேட்டிங், தோனியின் அதிரடி, ஸ்மித்தின் பேட்டிங், வார்னரின் விளாசல் என பல காரணங்கள் இருக்கின்றன.
ஒரு அணிக்கு தொடக்கம் என்பது மிகவும் முக்கியம் அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஷிகர் தவண், ரோஹித் சர்மா இருவரும் கடந்த காலங்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்கள். இதுவரை 21 இன்னிங்ஸ்களில் இருவரும் ஜோடியாக விளையாடி 1,146 ரன்கள் சேர்த்துள்ளார்கள். இருவரின் சராசரி 57.30, 5 முறை 100ரன்கள் வரையிலும் 2 முறை 50 ரன்கள் வரையிலும் நின்றுள்ளார்ள்.
அதேபோல, ஆஸ்திரேலிய அணியில் வார்னர், பிஞ்ச்கூட்டணி 8 போட்டிகளில் 635 ரன்கள் சேர்த்துள்ளார்கல். சராசரி 79, 2முறை 100ரன்களுக்கு மேலும், 3 முறை 50 ரன்களுக்கு மேலும் குவித்துள்ளார்கள். இவை தவிர சில புள்ளிவிவரங்களும் உள்ளன.