இந்தியா-பாக் ஆட்டத்தில் பெண்ணிடம் மோதிரம் கொடுத்து காதலை கூறிய இந்திய இளைஞர்

இந்தியா-பாக் ஆட்டத்தில் பெண்ணிடம் மோதிரம் கொடுத்து காதலை கூறிய  இந்திய இளைஞர்
Updated on
1 min read

உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின்போது, பெண் ஒருவரிடம் இந்திய இளைஞர் தனது காதலைச் சொல்லி, அந்த பெண் ஏற்றுக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. .

மான்செஸ்டர் ஓல்ட்டிராபோர்ட் மைதானத்தில் கடந்த 16-ம் தேதி உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான்அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

பாகிஸ்தான் அணி 2-வது பேட்டிங் செய்த தருணத்தின்போது, ஆட்டம் இந்தியாவின் பக்கம் சென்றபோது. பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த தருணத்தில் அரங்கில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த இந்திய ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்து உற்காசத்தில் கோஷமிட்டுக்கொண்டிருந்தனர்.

அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதைப் பார்த்த இந்திய இளைஞர் ஒருவர் தன்னுடைய  தோழியிடம் தனது காதலைச் சொல்ல இதுதான் சரியானதருணம் என்பதை முடிவுச செய்தார்.

அரங்கில் இருந்த அயிரக்கணக்கான ரசிகர்கள் கரகோஷம், சத்தத்துக்கு மத்தியில் அமைதியாக சென்ற அந்த இளைஞர் தனது தோழியிடம் மண்டியிட்டு, தான் கொண்டு வந்திருந்த  மோதிரத்தை அளித்து காதலை வெளிப்படுத்தினார்.

 அந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த பெண்ணுக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை. அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வெட்கத்துடன் அந்த இளைஞரின் காதலை ஏற்றுக்கொண்டு, மோதிரத்தை வாங்கினார்.

தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்ட தருணத்தில் அந்த இளைஞர் தனது தோழியை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்டுத்தினார்.

லண்டன் வாழ் இந்தியரான அந்த பெண்ணின் பெயர் அன்விதா. அவர் தனது ட்விட்டர்  பக்கத்தில் தனது ஆண் நண்பர் தன்னிடம் காதலைச் சொன்ன தருணத்தின் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த ட்விட்டல் இதுதான் அன்று நடந்தது என்று அன்விதா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு இங்கிலாந்து இந்தியா இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியின் போதும் நடந்தது. போட்டி நடந்துகொண்டிருந்தபோது, ஒரு இளைஞர் தனது தோழியிடம் சென்று காதலை வெளிப்படுத்தி மோதிரத்தை வழங்கினார். அனைவரின் பார்வையும் அவர்கள் மீது விழ அந்த பெண் புன்னகையுடன் காதலை ஏற்றுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in