Published : 05 Jun 2019 03:10 PM
Last Updated : 05 Jun 2019 03:10 PM

டாஸ் வென்றது தென் ஆப்பிரிக்கா: இந்திய அணியில் ஷமி நீக்கம்; ஆடுகளம் எப்படி?

சவுத்தாம்டன் நகரில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தீர்மானித்துள்ளது.

சவுத்தாம்டன் நகரில் இந்தியா, தென் ஆப்பிரிக்க இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தான் மோதிய இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய இரு அணிகளுடானான லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்து மூன்றாவது லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

அதேசமயம் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக, புவனேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். கே.எல். ராகுல், கேதார் ஜாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக தப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் முகமது ஷமிக்கு பதிலாக ஏன் புவனேஷ்வர் குமாரைத் தேர்வு செய்தார் எனத் தெரியிவில்லை. ஷமியின் பந்துவீச்சில் ஸ்விங், வேகம், துல்லியம் ஆகியவை இருக்கும். ஆனால், புவனேஷ்குமார் ரன்களை வழங்குவார்.

ஆடுகளம் எப்படி

சவுத்தாம்டனில் இருக்கும ஏஜஸ் பவுல் ஆடுகளத்தில் புற்கள் வெட்டப்பட்டு தட்டையாக, இறுக்கமாக இருப்பதால், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகத்தான் இருக்கும். டாஸ் வென்று முதலில் பேட் செய்வது உத்தமம். மழைவருவதற்கும், வானம் மேகமூட்டமாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளதால், சேஸிங் செய்யும்போது கடினமாக இருக்கும்.

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவம், விராட் கோலி(கேப்டன்), கேதார் ஜாதவ், கே.எல்.ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா

தெ. ஆப்பிரிக்க விவரம்

டீ காக், ஹசிம் அம்லா, டூப்பிளசிஸ்(கேப்டன்), ராசே வேன் டெர்டூசைன், டேவிட் மில்லர், டுமினி, அடில் பெலுக்வோயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, தப்ரியஸ் சாமஷி, இமரான் தாஹிர்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x