‘‘திருடன்... திருடன்...’’ - கிரிக்கெட் போட்டியை காண வந்த மல்லையாவை சூழ்ந்து கோஷம் எழுப்பிய இந்தியர்கள்; வைரலாகும் வீடியோ

‘‘திருடன்... திருடன்...’’ - கிரிக்கெட் போட்டியை காண வந்த மல்லையாவை சூழ்ந்து கோஷம் எழுப்பிய இந்தியர்கள்; வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

லண்டனில் நேற்று கிரிக்கெட் போட்டியை காண வந்த விஜய் மல்லையாவை சூழ்ந்து கொண்டு அங்குள்ள இந்தியர்கள் திருடன், திருடன் என கோஷம் எழுப்பியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி அளவில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக் குத் தப்பிய விஜய் மல்லையா மீது எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் புகார் அளித்தன. அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து அவரது சொத்துகளை முடக்கியது. தப்பி யோடிய பொருளாதார குற்றவாளி மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்காக இங்கி லாந்து அரசுடன் இந்திய அரசு பல் வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன்பேரில் லண்ட னில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது உத்தரவும் பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியை காண விஜய் மல்லையா ஓவல் மைதானத்திற்கு நேற்று வருகை தந்தார். வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளை காண அதிகமாக ஆர்வம் காட்டுபவர் விஜய் மல்லையா.

இந்தியாவில் இருந்தபோது நேரடியாக கிரிக்கெட் போட்டி நடைபெறும் அரங்கிற்கு சென்று உற்சாகமாக கண்டுகளிப்பார். நேற்று லண்டன் மைதானத்துக்கு வந்த அவர் வழக்கம்போல் உற்சாகமாக கண்டுகளித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கடன் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இந்திய அணிக்கு உற்சாகம் அளிக்கவே இங்கு வந்துள்ளேன், கடன் விவகாரத்தை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றார்.

இதைத்தொடர்ந்து அவர் புறப்பட்டுச் செல்ல முற்பட்டபோது, போட்டியை காண்பதற்காக இந்திய தேசியக் கொடியுடன் வந்திருந்த இந்தியர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். விஜய் மல்லையாவை நோக்கி திருடன்... திருடன்... என்று இந்தியில் கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இதனால் கடும் சங்கடத்தில் நெளிந்த அவர் இதனால் எனக்கோ, என்னுடன் வந்த உறவினர்களுக்கோ நெருடல் ஏதும் இல்லை எனக் கூறினார். எனினும் அவருடன் வந்திருந்த தனியார் பாதுகாவலர்கள், மக்களை விலக்கி அவரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in