Published : 21 Jun 2019 11:00 AM
Last Updated : 21 Jun 2019 11:00 AM

கவாஜா சுயநலமியா? தான் ரன் அவுட் ஆகி மேக்ஸ்வெலை ஆட விட்டிருக்க வேண்டும்: நெட்டிசன்கள் பாய்ச்சல்

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் 10 பந்துகளில் 32 ரன்கள் என்று வங்கதேசத்தைப் புரட்டி எடுத்து கொண்டிருந்த போது ரன் அவுட் ஆனார்.

 

உஸ்மான் கவாஜாவும் 72 பந்துகளில் 89 ரன்கள் என்று பிரமாதமான ஒரு இன்னிங்சை ஆடியதோடு வார்னருடன் இணைந்து 191 ரன்களைச் சேர்த்தார்.

 

ஆனால் ஆஸி. ஊடகங்களிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் அபாரமாக ஆடிவரும் கவாஜாவுக்கு பாராட்டுகள் எதுவும் அளிக்கவில்லை மாறாக மேக்ஸ்வெல் தவறான அழைப்பில் ரன் அவுட் ஆனது மட்டும் கவாஜா மீதான ‘சுயநலமி’ என்ற விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

 

அதாவது மேக்ஸ்வெல் ஒரு பந்தை ஃபைன் லெக் திசையில் திருப்பி விட்டார், பந்து வேகமாக ஷார்ட் பைன் லெக் பீல்டர் கையில் சென்றது, முதலில் ஸ்டார்ட் செய்த கவாஜா பிறகு நின்று மேக்ஸ்வெலை திருப்பி அனுப்பினார், ஆனால் மேக்ஸ்வெல் மீண்டும் ரீச் செய்யும் முயற்சியைக் கைவிட்டார், அதுவும் முடியாததே. ரன் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் வெளிப்படையாகவே கவாஜாவிடம் தன் கோபத்தை நேற்று களத்தில் காட்டிவிட்டார்.

 

இந்நிலையில் கவாஜா தான் ஓடி  ரன் அவுட் ஆனாலும் பரவாயில்லை, அதிரடி காட்டிவரும் மேக்ஸ்வெலை தன் விக்கெட்டைத் தியாகம் செய்து காப்பற்றியிருக்க வேண்டும் என்ற ரீதியில் பேசப்படுகிறது. அதன் பிறகு கவாஜாவும் நீடிக்கவில்லை அவரும் ஆட்டமிழந்தார். ஏன் மேக்ஸ்வெல்லையும் தவறாக அழைத்து தானும் அவுட் ஆகி ஏன் இப்படி ஆட வேண்டும் என்று ஆஸி. ஊடகங்களில் கிரிக்கெட் பண்டிதர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நெட்டிசன்கள் ஒரு படி மேலே போய் கவாஜா ஒரு சுயநலமி என்றே விமர்சிக்கின்றனர்.

 

இது குறித்து ஷேன் வார்ன் கூறும்போது, “மேக்ஸ்வெல் பிரமிக்க வைத்தார், வார்னர் ஸ்டன்னிங் 100. கவாஜாவும் நன்றாக ஆடுகிறார். ஆனால் அவர் ஓடாதது முட்டாள்தனமானது. இது ஏன் 20 ஒவர்களுக்கு முன்பாக நடக்கவில்லை. நான் முந்தைய ட்வீட்களில் கூறியது போல் ஆஸி. அணியில் போதிய வீரமும் ஆக்ரோஷமும் உள்ளது, ஆனால் கடைசி 10 ஓவர் வரை பாரம்பரிய முறையில் ஆடுகின்றனர். ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

 

நெட்டிசன்களில் ஒருவர், “கவாஜாவுக்கு ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை, அவர் தான் ரன் அவுட் ஆகி மேக்ஸ்வெல்லை ஆட விட்டிருக்க வேண்டும் என்கிறார்

 

ஸ்போர்ட்ஸ் தாட்ஸ் என்ற கணக்கை வைத்திருக்கும் மற்றொரு நெட்டிசன், “உஸ்மான் ஒரு சுயநலமி, சோம்பேறி” என்று தாக்கியுள்ளார்.

 

இன்னொரு நபர் 72 பந்துகளில் 89 அடித்து விட்டு ஏன் ரன் ஓடாமல் நிற்க வேண்டும்., என்று கவாஜாவை சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x