

சவுத்தாம்டனில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 28-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி சொதப்பலாகத் தொடங்கி 15 ஓவர்கள் முடிவில் 66/2 என்று ஆடிவருகிறது.
முன்னதாக ரோஹித் சர்மா, லெக் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் வீசிய அச்சுறுத்தல் இல்லாத ஒரு நட்புமுறையான பந்து வீச்சிலும் 10 பந்துகளைச் சந்தித்து ஒரேயொரு ரன்னை மட்டுமே எடுத்து பவுல்டு ஆகி வெளியேறினார்.
கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா திடீரென இது போன்று சொதப்புவது சீரற்ற தன்மையைக் காட்டுகிறது.
5வது ஓவரில் முஜீப் உர் ரஹ்மான் வீசிய 2வது பந்தில் பவுல்டு ஆனார். பந்து ஆஃப் ஸ்டம்பில் லெந்தில் பிட்ச் ஆனது முன்னால் வந்து ஆடிய போது பந்து அவர் மட்டையைக் கடந்து சென்று ஆஃப் ஸ்டம்ப் மேல் முனையைத் தட்டியது. வெளியேறினார்.
இந்த உலகக்கோப்பையில் ஸ்பின்னரிடம் விக்கெட்டை பறிகொடுத்த முதல் இந்திய வீரர் ஆனார் ரோஹித் சர்மா.
சற்று முன் கே.எல்.ராகுல் 53 பந்துகள் ஆடி 30 ரன்களில் 2 பவுண்டரிகள் மட்டும் எடுத்து அதிருப்தி தரும் ஒரு இன்னிங்சில் ஆஃப் ஸ்பின்னர் மொகமது நபியின் பந்தை பொறுமையின்றி ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஷார்ட் தேர்ட் மேனில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் என்று சொதப்பி வருகிறது. ஒரு முனையில் விராட் கோலி அனாயாச சரளத்துடன் ஆடி வருகிறார். அவர் 24 பந்துகளில் 32 நாட் அவுட். விஜய் சங்கரை 4ம் நிலையில் இறக்கியுள்ளார்.