Published : 10 Jun 2019 06:37 PM
Last Updated : 10 Jun 2019 06:37 PM

ஆஸ்திரேலிய ரசிகர்கள் எண்ணிக்கை: மைக்கேல் வான் கிண்டல்

நேற்று ஓவலில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலிய உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய ரசிகர்களின் எண்ணிக்கை ஆரவாரம் ஆஸ்திரேலிய ரசிகர்களை விஞ்சியது.

 

இந்திய அணிக்கு இங்கிலாந்தில் களத்திலும் வெளியேயும் ஏகப்பட்ட ஆதரவுகள், கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் அணி என்ற அந்தஸ்துடன் இந்திய அணி பார்க்கப்படுகிறது.

 

அதுவும் மே.இ.தீவுகளை வென்றதையடுத்து இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா சரியான சவாலை அளிக்கும் என்று பார்த்தால் இந்திய அணி மிகப்பிரமாதமாக ஆடி, தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்காவைத் தொடந்து மிகவும் தொழில்நேர்த்தியுடன் ஆடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, குறிப்பாக இந்திய பீல்டிங், ஜடேஜா எடுத்த கேட்ச் தோனியின் சிக்ஸ், விராட் கோலியின் அனாயாச இன்னிங்ஸ், பாண்டியாவின் அதிரடி என்று ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி விருந்தாக அமைந்தது.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்களின் எண்ணிக்கை பற்றி இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் இந்நாள் வர்ணனையாளருமான மைக்கேல் வான் கடும் கிண்டல் செய்துள்ளார்.

 

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்,

 

“இதுவரை நான் ஆஸ்திரேலியா ரசிகர்கள் என்று மைதானத்தில்  33 பேரைத்தான் பார்க்கிறேன். இதில் ஆஸி. அணி வீரர்கள், அந்த அணியின் உதவிப்பணியாளர்கள் ஆகியோரும் அடங்குவார்கள்” என்று செம கிண்டல் ட்வீட் செய்துள்ளார்.

 

அவரது இந்த ட்வீட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து பின்னூட்டம் இட்டுள்ளனர். அதாவது ‘வான் நீங்கள் சரியான அணியைத்தான் ஆதரிக்கிறீர்கள்’ என்று பாராட்டுதலும் அடங்கும்.

 

ஆனால் ஒரு நெட்டிசன் மட்டும், “ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் மட்டும் ஒரே விளையாட்டல்ல, மேலும் அது இங்கு எங்கள் மதமும் அல்ல” என்று ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x