Published : 14 Jun 2019 03:40 PM
Last Updated : 14 Jun 2019 03:40 PM

இங்கிலாந்து முதலில் பீல்டிங்: வோக்ஸ் யார்க்கரில் எவின் லூயிஸ் பவுல்டு; கெய்லுக்கு கேட்சை விட்ட உட்

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 19வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

 

நிறைய மழை பெய்திருப்பதால் பிட்சில் ஈரப்பதம் இருக்கும், மேலும் மேகமூட்டமான வானிலையைப் பயன்படுத்தி சில விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்று பவுலிங் தேர்வு செய்ததாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.

 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் இங்கிலாந்து அணியே இதிலும் ஆடுகிறது, அதாவது மொயின் அலி இல்லை, மார்க் வுட் ஆடுகிறார்.

 

மே.இ.தீவுகள் அணியில் எவின் லூயிஸ், ஆண்ட்ரே ரஸல், ஷனன் கேப்ரியல் ஆகிய 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஷ்லி நர்ஸ் இல்லை.

 

ஆட்டம் தொடங்கி கிறிஸ் வோக்ஸ் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசத் தொடங்கினர். கெய்லுக்கு வோக்ஸ் சிறப்பாக வீசி வருகிறார்., ஆனால் எவின் லூயிஸ் ஆட்டமிழந்தார். டைட்டாக வீசி விட்டு ஒரு ஃபுல் லெந்த் - யார்க்கர் பந்தை வீச எவின் லூயிஸ் பவுல்டு ஆகி 2 ரன்களில் வெளியேறினார்.

 

கிறிஸ் கெய்ல் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஓவரில் 2 பவுண்டரிகளை அடித்தார், முன்னதாக 13 பந்துகளில் 1 ரன் என்று கட்டுப்படுத்தப்பட்டார்.

 

சற்றுமுன் வோக்ஸ் பந்தை கெய்ல் அடிக்க முயல பந்து எட்ஜ் ஆகி தேர்ட்மேனுக்கு உயரே எழும்ப அங்கு மார்க் உட் கேட்சை பிடித்து விட்டார். கெய்ல் தப்பினார். 13 பந்தில் 1 ரன் இருந்த கெய்ல் தற்போது 21 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தும், ஷேய் ஹோப் 1 ரன் எடுத்தும் ஆடி வருகின்றனர், மே.இ.தீவுகள் 7 ஓவர்களில் 21/1.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x