

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள்க்கு இடையிலான போட்டி 7.3 ஒவர்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது, நல்ல மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
ஆனால் இந்த மழை தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு வரப்பிரசாதம்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அந்த அணிக்கு புள்ளிகள் பட்டியலில் முதல் புள்ளியைப்பெற்று கணக்கைத் தொடங்கும் இல்லையெனில் ஆக்ரோஷ மே.இ.தீவுகளுக்கு எதிராக பெரும் கஷ்டம்தான்.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆம்லா, டிகாக் இறங்க காட்ரெல் பவுலிங்கைத் தொடங்கினார். முதல் ஓவர் டீசண்டான ஓவராக அமைந்தது 2 ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார் காட்ரெல்.
ஆனால் கிமார் ரோச் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே எட்ஜ் என்று மிகப்பெரிய முறையீடு எழும்ப நடுவர் கையை உயர்த்தினார் ஆனால் டி காக் உடனடியாக ரிவியூ செய்தார். ஹோப் ஒரு கையில் டைவிங் கேட்ச் எடுத்தார். ஆனால் பந்து மட்டையில் படவில்லை, தப்பினார் டி காக்.
அடுத்த ஓவரில் மீண்டும் காட்ரெல் வீச டி காக் ஷார்ட் பிட்ச் பந்திலி 3 ரன்கள் எடுக்க, ஆம்லா ஆஃப் வாலி பந்தை பாயிண்டில் பவுண்டரி அடித்தார். ஆனால் அதே ஒவரில் ஒரு பந்து கூடுதல் வேகத்துடன் எகிறு பந்தாகவும் அமைய ஆம்லா மெதுவாக மட்டையை உயர்த்தி ஆடப்போக எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கெய்ல் கையில் போய் விழுந்தது. 6 ரன்களில் ஆம்லா அவுட்.
மார்க்ரம் ஒன் டவுனில் இறங்கினார். கிரார் ரோச்சை மிகப்பிரமாதமாக இவர் ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். இடையில் குவிண்டன் டி காக்கிற்கு ஒரு பவுன்சர் எகிற அவர் எம்பிக்குதித்து பந்து கிளவ்வில் பட்டு ஆளில்லா இடத்தில் விழுந்தது.
அதே போல் காட்ரெல் ஒரு பந்தை மார்க்ரமுக்கு நெஞ்சுயரம் எழுப்ப ஃபைன் லெக்கில் திருப்பி விட நினைத்தார், ஆனால் மட்டையில் பட்டு ஷேய் ஹோப்பின் லெக் திசை கேட்சாக முடிந்தது. காட்ரெல் 2வது விக்கெட். 5 ரன்களில் வெளியேறினார் மார்க்ரம்
குவிண்டன் டி காக் 16 ரன்களுடனும் கேப்டன் டுப்ளெசிஸ் 7 பந்துகளில் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.