எப்ஐஹெச் ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி

எப்ஐஹெச் ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி
Updated on
1 min read

ஹிரோஷிமாவில் இன்று நடந்த எப்ஐஹெச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியில் ஜப்பான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி.

தங்கப் பதக்கம் வென்றதோடு மட்டுமல்லமல், இந்திய மகளிர் அணி , ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிக்கும் தகுதி பெற்றதை உறுதி செய்தது.

ஹிரோஷிமா நகரில் எப்ஐஹெச் மகளிர் சீரிஸ் பைனல்ஸ் ஹாக்கிப் போட்டி நடந்தது. இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்திய ஜப்பான் அணியும், இந்திய மகளிர் அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை ராணி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இந்தியாவுக்குப் பதிலடியாக 11-வது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனை கனன் மோரி கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். 9-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக மாற்றத் தவறினர்.

அதன்பின் 45-வது நிமிடத்திலும், 60-வது நிமிடத்திலும் இந்திய வீராங்கனை குருஜித் கவுர் இரு கோல்களை அடித்து அணியை 3-1 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார். அதன்பின் இறுதிவரை ஜப்பான் அணியால் கோல் அடிக்க முடியாததால், இந்திய அணி  3-1 என்ற கணக்கில் வென்றது.

இந்திய அணியின் வீராங்கனை ராணி சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in