Published : 12 Jun 2019 09:54 AM
Last Updated : 12 Jun 2019 09:54 AM

கிரிக்கெட்டை அச்சுறுத்தும் மழை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பல ஆட்டங்களை அங்கு பெய்து வரும் கனத்த மழை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல ஆட்டங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் சில ஆட்டங்களும் ரத்தாகும் சூழ்நிலை உள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இதுவரை 16 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 3 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறவிருந் தது. ஆனால் இந்த ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப் பட்டது.

தென்ஆப்பிரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் சவுத்தாம்டனில் நேற்று முன் தினம்  மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. நேற்று வங்கதேசம், இலங்கை அணிகளி டையிலான ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப் பட்டது.

மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்படுகிறது. ஆனால் மழையால் போட்டி ரத்து செய்யப்படுவது முன்னணி அணிகளுக்கும் பாதிப்பைஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் பல இடங்களில் பெய்து வரும் பலத்த மழையால் மேலும் சில போட்டிகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.

மழை எச்சரிக்கை

இதேபோல ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் சவுத்தாம்டனில் மோத உள்ள

ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.. இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வரும் 13-ம் தேதி நாட்டிங்காமில் சந்திக்கவுள்ளன.

இந்த ஆட்டமும் மழையால்பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யவாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x