

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 32வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் பெஹெண்டார்ப், நேதன் லயன் வந்துள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் உடற்தகுதி பெற்று ஆடுகிறார்.
பிட்சில் கொஞ்சம் பச்சை தெரிகிறது, வானிலையும் தொடக்கத்தில் ஸ்விங் பவுலிங்குக்குச் சாதகமாக இருக்கக் கூடும் என்பதால் மோர்கன் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.
பொதுவாக நானும் பவுலிங் செய்திருப்பேன் என்று டாஸ் வென்ற கேப்டனை எதிரணி கேப்டன் எதிரொலிப்பது வழக்கம், ஆனால் ஏரோன் பிஞ்ச், முதலில் பேட் செய்வது எனக்கு ஒன்றும் ஏமாற்றம் அளிக்கவில்லை என்று மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். ஆனாலும் உடனேயே நான் டாஸ் வென்றிருந்தாலும் ஒருவேளை பவுலிங்கைத் தேர்வு செய்திருக்கலாம் என்றார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை 5-0 என்று வெற்றி பெற்றிருப்பது தங்கள் நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக மோர்கன் தெரிவித்தார். ஜோப்ரா ஆர்ச்சர் / வார்னர் போட்டி எப்படி அமைகிறது என்று பார்ப்போம்.