Published : 19 Jun 2019 05:37 PM
Last Updated : 19 Jun 2019 05:37 PM

குவிண்டன் டி காக்-ஐ ‘ஒர்க் அவுட்’ செய்து ஸ்டம்பைப் பறக்கவிட்ட ட்ரெண்ட் போல்ட்

பர்மிங்ஹாமில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் 25வது போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் தென் ஆப்பிரிக்க அணியை பேட் செய்ய அழைத்தார்.

 

வழக்கம் போல் குவிண்டன் டி காக், ஆம்லா களமிறங்க, நியூஸிலாந்து அணியில் முதல் ஓவரை மேட் ஹென்றி வீசினார். இதில் ஆம்லா அருமையாக பைன் லெக்கில் பவுண்டரி விளாசி கணக்கைத் தொடங்கினார்.

 

2வது ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலிருந்தே இடது கை வீரரான டி காக்கிற்கு பந்தை உள்ளே கொண்டு சென்றார் போல்ட். அதாவது ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமாக வீசி பந்தை உள்ளே ஸ்விங் செய்வது, டி காக்கிற்கு இன்ஸ்விங்கர்.  அதாவது டி காக்கை  ஆன் ட்ரைவ் ஆடத் தூண்டி அழைப்பது, அதில் அவர் கோட்டை விட்டால் குச்சி பெயர்ந்து விடும், இதுதான் போல்ட்டின் பிரமாதமான உத்தி.

 

காரணம் டி காக் தொடக்கத்தில் கால்களை நகர்த்துவதில் கொஞ்சம் தயக்கம் காட்டக்கூடிய வீரர்.

 

இந்நிலையில்தான் ஒரு லேட் இன்ஸ்விங்கரையும் வீசினார் போல்ட். இதையும் மிட் ஆனில் அடித்தார். ரன் இல்லை. இதே போன்ற பந்தின் இன்னொரு முயற்சி கொஞ்சம் லெக் ஸ்டம்ப் திசையில் செல்ல டி காக்  ஃபைன் லெக்கில் பவுண்டரி அடித்தார். ஒருவழியாக அவரை அந்த ஷாட் நோக்கி இழுத்தாகிவிட்டது.

 

மீண்டும் அடுத்த பந்தும் இன்ஸ்விங்கராக மிட்விக்கெட்டில் தள்ளி விட்டார் டி காக்.

 

5வது பந்து மிகச்சரியான லெந்தில் பிட்ச் ஆகி இன்ஸ்விங்கராக ஆன் டிரைவுக்குப் பழக்கப்படுதப்பட்டதால் ஆன் ட்ரைவ் ஆடப் போனார், ஆனால் கால் நகரவில்லை மட்டை மட்டும் வர பந்து உள்ளே புகுந்து ஸ்டம்ப் எகிறியது.

 

பிரமாதமாக டி காக் விக்கெட்டை செட்-அப் செய்தார் போல்ட், டி காக் 5 ரன்களில் அவுட் ஆனார்.

 

டுப்ளெசிஸ் 23 ரன்களுக்கு அருமையாக ஆடினார், ஆனால் அவரையும் பெர்கூசன் ஒர்க் அவுட் செய்தார். ஒரு பவுன்சர் அடுத்து ஒரு யார்க்கர் டுபிளெசிஸும் கிளீன் பவுல்டு, தென் ஆப்பிரிக்கா 15 ஓவர்களில் 60/2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x