Published : 14 Jun 2019 12:08 PM
Last Updated : 14 Jun 2019 12:08 PM

மிரட்டும் மழை, ரத்தாகும் ஆட்டங்கள்: அரையிறுதி, பைனல் என்னாகும்: ஐசிசி புதிய விதிமுறைகள் சொல்வது என்ன?

உலகக் கோப்பைப் போட்டியில் பெய்து வரும் மழையால் இதுவரை 3 ஆட்டங்கள் ரத்தாகியுள்ள நிலையில், ஐசிசி புதிய முறைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகள் தொடர்ந்து விறுவிறுப்டைந்து வரும்போது, கடந்த சில நாட்களாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் பெய்துவரும் மழையால் 3 ஆட்டங்கள் ஒரு  பந்து கூட வீசப்படாமல் ரத்தாகியுள்ளன.

கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் காணக் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளின் ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ரத்தானது.

லீக் ஆட்டங்கள் ரத்தானால், அதற்கு மாற்றுஏற்பாடுகள் மாற்று நாளில் போட்டி நடத்த ஐசிசி ரிசர்வ் நாள் குறித்து எந்தவிதமான ஏற்பாடும், திட்டமும் வைக்கவில்லை. இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அதிருப்தியும், வேதனையும் ஐசிசி மீது தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற லீக் ஆட்டங்கள் ரத்தாகி புள்ளிகள் சமபங்கு அளிக்கப்படுவதால், திறமையான அணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது. ஏதாவது ஒருபோட்டி மழையின்றி நடக்கும்போது,  அதிக அழுத்தத்துடன் விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

வரும் நாட்களில் இங்கிலாந்தில் பல்வேறு நகரங்களில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறதே தவிர, குறைவதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு இருக்கும் போது ஒருபோட்டி நடைபெறாமல் போகும்போது, இருபுள்ளிகளை பிரித்து தலா ஒருபுள்ளி வீதம் அணிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்படியே சென்றால், பல அணிகள் ஒரே புள்ளிகள் பெறவும் வாய்ப்புள்ளது.

தற்போது 10 அணிகளில் முதல் 3 அணிகளைத் தவிர மீதமுள்ள அணிகள் சராசரியாக 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 4 புள்ளிகளில் மட்டும் 2 அணிகளும்(இங்கிலாந்து, இலங்கை), 3 புள்ளிகளில் 3 அணிகளும்(மே.இதீவுகள், பாக், வங்கதேசம்) இருக்கின்றன. இந்த அணிகள் புள்ளிகள் சமஅளவு பெற்றபோதிலும் ரன்ரேட் அடிப்படையில்தான் பிரிக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் மழை வந்தால் என்ன செய்யப்படும், அரையிறுதி, இறுதிப் போட்டியில் மழை வந்தால் என்ன செய்ப்படும், ரிசர்வ் நாள் எந்த போட்டிக்கு ஒதுக்கப்படும் , அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் டைபிரேக்கர் முறையில் வந்தால் என்ன செய்யப்படும், அணிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படும் என்பதுகுறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

1.    லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப்  பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதி வாய்ப்புக்குரிய அணிகள் ஒரே புள்ளிகளை பெற்று டைபிரேக்கர் நிலையில் இருக்கும்பட்சத்தில் யார் அதிக வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று முதலில் பார்க்கப்படும்.

 

2.    அதிலும் சமநிலை நீடித்தால் ரன்-ரேட் அடிப்படையில் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்று கணக்கிடப்படும்

 

3.    ரன்ரேட் அடிப்படையிலும் தசம புள்ளிகளில் சமனாக இருக்கும் பட்சத்தில், இரு அணிகளும் சமீபத்தில் நேருக்குநேர் மோதியுள்ள ஒருநாள் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை எந்த அணி  பெற்றுள்ளதோ அந்த அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

4.    இந்த மூன்று காரணிகளிலும் குழப்பம் நீடித்தால், உலகக் கோப்பைப்போட்டிக்கு முன், அணிகளின் தரவரிசை கணக்கிடப்படும். அதில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அதை வைத்து நிர்ணயம் செய்யப்பட்டு அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும்

 

5.    அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் அதாவது மாற்று நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

6. லீக ஆட்டங்களி் மழை பெய்து ஆட்டம் தடை  பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ ரிசர்வ் நாள் கிடையாது.

 

7.    அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தால் மட்டும் சூப்பர் ஓவர் மூலம் முடிவு காணப்படும்.

 

8. லீக்சுற்றுகளில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர் கணக்கிடப்படாது.

 

9. அரையிறுதி ஆட்டத்தில் ரிசர்வ் நாளிலும் மழை வந்து ஆட்டம் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டால், இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணியை, லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை பெற்றுள்ளதோ அந்த அணிக்கு வாய்ப்பு வழங்ககப்படும்.

 

10.இறுதிப்போட்டியின் மழை குறிக்கிட்டால், ரிசர்வ் நாளின்போதும் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x