Published : 26 Jun 2019 09:25 AM
Last Updated : 26 Jun 2019 09:25 AM

அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நியூஸிலாந்து: பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

சர்பிராஸ் அகமது தலைமை யிலான பாகிஸ்தான் அணி தனக்கே உரித்தான கணிக்க முடியாத அணி என்ற முத்திரையுடன் விளையாடி வருகிறது. 6 ஆட்டங்களில், 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என 5 புள்ளிகளுடன் பாகிஸ் தான் அணி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

இந்திய அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளான பாகிஸ்தான் அணி அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டு வந்தது. தற்போது மீண்டும் ஒரு முறை கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களிடம் இருந்து நிலைத்தன்மையான செயல்பாடுகள் வெளிவரவில்லை. கடந்த ஆட்டத்தில் ஹாரிஸ் சோகைல் நடுவரிசையில் களமி றங்கி அதிரடியாக விளையாடிய தால் பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க முடிந்தது. இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

ஹசன் அலி, பாபர் அசாம், பஹர் ஸமான் ஆகியோர் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிக ரிக்கும். பந்து வீச்சில் மொகமது அமீரை மட்டுமே அணி பெரிதும் நம்பி உள்ளது. 15 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள அவருக்கு உறுதுணையாக பந்து வீசுவதற்கு வலுவான வீரர் இல்லாததும் சற்று குறையாக உள்ளது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை விளை யாடி உள்ள 6 ஆட்டங்களில் பாகிஸ் தான் அணி 14 கேட்ச்களை தவற விட்டுள்ளது. இந்த விஷயத்தில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

கேன் வில்லியம்சன் தலைமையி லான நியூஸிலாந்து இந்தத் தொட ரில் தோல்வியை சந்திக்காத அணி யாக வலம் வருகிறது. 6 ஆட்டங் களில் விளையாடி உள்ள அந்த அணி 5 வெற்றி, ஒரு ஆட்டம் ரத்து என 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஆட்டத்துக்கு ஆட்டம் அந்த அணியின் செயல்திறன் மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் கேன் வில்லியம்சன் சக வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து அணியை முன்னின்று நடத்துவது அசுர பலமாக உள்ளது. இரு சதங்கள் விளாசியுள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். அவருக்கு உறுதுணையாக சீனியர் பேட்ஸ்மேனான ராஸ் டெய்லரும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்.

இதேபோன்ற ஆல்ரவுண்டர் களான காலின் டி கிராண்ட்ஹோம், நீஷாம் ஆகியோரும் பயனுள்ள வகையிலான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடக்க பேட்ஸ்மேன்களான மார்ட்டின் கப்தில், காலின் மன்றோ ஜோடி மீண்டும் பார்முக்கு திரும்பினால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும்.

பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் இக்கட்டான தருணங்களில் விக்கெட் கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். இவர்கள் இன்றைய ஆட்டத்திலும் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும். இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறும். இதனால் அந்த அணி வீரர்கள் கூடுதல் முனைப்புடன் செயல்படக் கூடும்.

பாகிஸ்தான்

சர்பிராஸ் அகமது (கேப்டன்), பஹர் ஸமான், இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், மொகமது ஹபீஸ், இமாத் வாசிம், ஷதப் கான், வகாப் ரியாஸ், மொகமது அமிர், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அப்ரிடி, மொகமது ஹஸ்நயின்.

நியூஸிலாந்து

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, டாம் லேதம், டாம் பிளண்டெல், ஜிம்மி நீஷாம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x