Published : 04 Jun 2019 01:12 PM
Last Updated : 04 Jun 2019 01:12 PM

இந்திய அணியின் ஊடக சந்திப்பை புறக்கணித்த பத்திரிகையாளர்கள்: என்ன காரணம் ?

இந்திய அணி ஏற்பாடு செய்திருந்த ஊடகச் சந்திப்பை லண்டன் பத்திரிகையாளர்கள் புறக்கணித்ததால் பெரும் அவமானத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல், வலைபயிற்சியில் ஈடுபடும் வீரர்களான கலீல் அகமது, ஆவேஷ் கான், தீபக் சாஹர் ஆகியோரை வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முயன்றதால் கோபடைத்து புறக்கணித்ததுள்ளார்கள்.

ஆனால், தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு முன்பாக, தானும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஊடகத்தினரைச் சந்திப்போம் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார். ஆதன்படி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு பத்திரிகையாளர்கள் சென்றபோது கோலி, ரவிசாஸ்திரிக்கு பதிலாக வலைபயிற்சியில் பந்துவீசும் வீரர்கள் இருந்ததால், பத்திரிகையாளர்கள் விரக்தி அடைந்தனர்.

மேலும், இந்திய அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் சந்திக்க வேண்டிய இடத்தில் அணி நிர்வாகம் சாஹர், ஆவேஷ் கானை அனுப்பியது தங்களை அவமானப்படுத்தியதுபோன்றது என்று கூறி பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர். ஆனால், இந்திய அணி நிர்வாகமோ, விரைவில் இருவரும் தாய் நாடு சென்றுவிடுவார்கள் என்பதால் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வைத்தோம் என்று கூறியது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், " இந்திய அணி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு முறையானது அல்ல. இந்திய அணியில் இடம்பெறாத சில வீரர்களை, வலைபயிற்சியில்பந்துவீசு மட்டும் அழைத்துவரப்பட்ட வீரர்களை கொண்டு எவ்வாறு பத்திரிகையாளர்களை சந்திக்க வைக்கலாம். இது நியாயமானது அல்ல. அவர்கள் எவ்வாறு இந்திய அணி சார்பில் பேச முடியும். எங்களின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி ஆகியோர் தான் பேட்டி கொடுப்பதாகக் கூறினார்கள் " எனத் தெரிவித்தார்.

ஆனால், இதுகுறித்து இந்திய அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட கேட்க முயன்றபோது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x