Published : 10 Jun 2019 08:19 AM
Last Updated : 10 Jun 2019 08:19 AM

எம்.எஸ். தோனி கிளவுஸில் முத்திரை விவகாரம்: ஐசிசி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி தனது கிளவுஸில் ராணுவ முத்திரையை அணிந்து விளையாடக்கூடாது என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) உத்தரவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்றுக்கொண்டுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் லீக் ஆட்டம் நடைபெற் றது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத் தின் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரை இடம்பெற் றிருந்தது. இந்தக் காட்சி கேமராவில் ஜூம் செய்யப்பட்டு தோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்த தோனியின் ரசிகர்கள், தோனிக்கு இருக்கும் நாட்டுப்பற்றைப் புகழ்ந்து தள்ளினர். இந்த முத்திரை படமும் சமூக ஊடகங்களிலும் வைரலா னது. ஆனால், அனைத்துவிதமான வேறுபாடுகளை மறந்து விளை யாடும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை ஐசிசி விரும்ப வில்லை.

இதையடுத்து உடனடியாக தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பிசிசிஐ-க்கும், தோனிக்கும் ஐசிசி அறிவுறுத் தியது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத் தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய், கூறும்போது, "தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்கத் தேவை யில்லை.

இது தொடர்பாக ஐசிசியிடம் முறைப்படி அனுமதி கேட்டுள் ளோம். ஐசிசி விதிமுறையின்படி, வீரர்கள் வர்த்தகரீதியான, மதம், ராணுவம் தொடர்பான அடை யாளங்களை அணியக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், தோனி கையுறையில் இருக்கும் முத்திரை வர்த்தக ரீதியாகவோ, அல்லது மதரீதியாகவோ இருக் கும் அடையாளம் அல்ல. இது தொடர்பாக ஐசிசியிடம் அனுமதி கோரி பேசி வருகிறோம்" என்றார்.

ஆனால், பிசிசிஐ அளித்த விளக்கத்தை ஐசிசி ஏற்கவில்லை. உடனடியாக தோனி தனது கையுறையில் இருக்கும் முத் திரையை நீக்க வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டது. இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிக் கையில் கூறும்போது, "உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப் பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வீரர் தோனி தனது கையுறையில் அணிந்திருந்த முத்திரைக்கு ஐசிசி சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஐசிசி விதிமுறைகளின்படி எந்த ஒரு வீரரும் எந்த தனிப்பட்ட செய்தியையோ அல்லது எந்தவித மான பொருட்கள், கருவிகள் குறித்த முத்திரைகளையோ பதிக்க ஐசிசி அனுமதியளிக்காது. அதுமட்டுமல் லாமல் ஐசிசி விதிமுறைகளின்படி தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரை விதிமுறை மீறலாகும். அதை உடனே நீக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

இந்நிலையில் ஐசிசி-யின் விளக்கத்தை இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் கூறும்போது, ‘‘ஐசிசி-யின் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுவது என்பதுதான் எங்களது நிலைப்பாடு. விதிமுறை களை நாங்கள் மீறமாட்டோம். ஐசிசி விதிகளை தொடர்ந்து கடைப் பிடிப்போம். நாங்கள் விளை யாட்டை நேசிக்கும் ஒரு தேசம். ஐசிசி விதிகளின்படி செயல் படுவோம்” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x