Published : 25 Jun 2019 02:42 PM
Last Updated : 25 Jun 2019 02:42 PM

2011 உலகக்கோப்பையில் யுவராஜ் செய்தது போலவே ‘டபுள்’ அடித்த ஷாகிப் அல் ஹசன்: 1983, 2011 ஒரு சுவாரஸியமான தற்செயல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியாவை விடவும் பிரமாதமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இன்னொரு இந்திய இடது கை உலகக்கோப்பை நாயகனான யுவராஜ் சிங் பொலவே ‘டபுள்’ சாதனை நிகழ்த்தினார்.

 

நேற்றைய போட்டியில் சுவாரசியமான புள்ளி விவரங்கள் சில:

 

ஷாகிப் அல் ஹசன் நேற்று 69 பந்துகளில் 51 ரன்கள் எடுத்ததோடு பந்து வீச்சில் 10 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒரே உலகக்கோப்பைப் போட்டியில் இதற்கு முன்பாக யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக 50 நாட் அவுட் மற்றும் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டபுள் சாதனை படைத்தார். ஷாகிப் அல் ஹசன் தற்போது யுவராஜ் சிங் போலவே ‘டபுள்’அடித்தார்.

 

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஷாகிப் அல் ஹசனின் முதல் ‘டபுள்’ ஆகும் இது.

 

அதே போல் ஒரே உலகக்கோப்பையில் (வேறு வேறு போட்டிகளில்) சதமும் 5 விக்கெட்டுகளையும் எடுத்ததில் கபில்தேவ் (1983), யுவராஜ் சிங் (2011) ஆகியோர் பட்டியலில் ஷாகிப் அல் ஹசனும் இணைந்துள்ளார். இதில் சுவாரஸ்யமான தற்செயல் என்னவெனில் 1983-ல் கபில் தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றது, 2011-ல் யுவராஜ் தொடர் நாயகனாக இந்தியா உலகக்கோப்பையை வென்றது. இந்த தற்செயல் சங்கிலியின் இன்னொரு கண்ணி ஷாகிப்.

 

இந்த உலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் 476 ரன்கள் 10 விக்கெட் என்று உள்ளார். இதற்கு முன்பாக உலகக்கோப்பையில் யாரும் 400க்கும் மேல் ரன்கள் 10 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. 1999-ல் லான்ஸ் குளூஸ்னர் 281 ரன்கள் 17 விக்கெட்டுகள், 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 362 ரன்கள் 15 விக்கெட்.

 

இதற்கு முன்னதாக வங்கதேச அணியில் உலகக்கோப்பையில் யாரும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதில்லை

 

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 1000 ரன்களுக்கு மேலும் 30 விக்கெட்டுகளுக்கு அதிகமாகவும் எடுத்ததில்லை, இதிலும் வரலாறு படைத்தார் ஷாகிப் அல் ஹசன். 27 உ.கோப்பை போட்டிகளில் 1016 ரன்கள் 33 விக்கெட்டுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x