டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்: ஆடுகளம் யாருக்கு சாதகம்?

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்: ஆடுகளம் யாருக்கு சாதகம்?
Updated on
1 min read

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறனன. ஆஸ்திரேலியா இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று இன்று 3-வது போட்டியில்  இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடி தென் ஆப்பிரிக்காவை வென்றுள்ளது. 2-வது ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.

இரு அணிகளும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வெற்றி முக்கியம் என்பதால், வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பார்கள். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார் முகமது ஷமி, விஜய் சங்கர் வருவதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவை வென்றபோது இருந்த அதே அணிதான் களத்தில் இறங்குகிறது என்பதால், இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும்  இல்லை. அதேபோல ஆஸ்திரேலிய அணியிலும் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

ஆடுகளம் எப்படி

லண்டன் ஆடுகளம் ஓரளவுக்கு காய்ந்து, தட்டையாக, லேசான புற்கள் நிறைந்து  இருக்கிறது. தேர்டு மேன் திசையில் பவுண்டரி 60 மீட்டருக்கும் குறைவாக இருக்கிறது, கவர்டிரைவ்   பவுண்டரிகளைப் பொருத்தவரை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான தொலைவு அடிக்க வேண்டியது இருக்கும்.

ஆடுகளம் முழுமையாக காயவில்லை லேசான ஈரப்பதம் கொணடிருக்கிறது. காலை வெளியில் நேரம் செல்லச் செல்ல ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும். அதேசமயம் ஓவலில் நண்பகலுக்கு பின் வானம் மேகமூட்டத்துடன், லேசாக சாரலுக்கு வாய்ப்பு இருப்பதால், சேஸிங் செய்யும் போது சிறிது கடினமாக இருக்கும். சுழற்பந்துவீச்சு என்றால், அதிகமாக திரும்பும், வேகப்பந்துவீச்சு என்றால், அதிகமாக ஸ்விங் ஆகும். ஆனால், இந்த ஆடுகளத்தில் அதிகமாக ஸ்கோர் செய்ய முடியாது. அதிகபட்சமாக 250க்கு மேல்தான் 300 ரன்களுக்குள்தான் சேர்க்க முடியும். டாஸ் வென்று பேட்ஸ் செய்தது சிறப்பான முடிவு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in