எங்களுக்கு மட்டும் ஏன் கிரீன் டாப் பிட்ச்?  இலங்கை பயிற்சியாளர் புலம்பல்

எங்களுக்கு மட்டும் ஏன் கிரீன் டாப் பிட்ச்?  இலங்கை பயிற்சியாளர் புலம்பல்
Updated on
1 min read

நியூஸிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியிலும் கிரீன் டாப் பிட்ச், நேற்று ஆப்கானை போராடி வென்ற போதும் கிரீன் டாப் பிட்ச் என்று எங்களுக்கு மட்டுமே பசுந்தரை ஆடுகளத்தை அளிப்பது ஏன் என்று இலங்கை அணி பயிற்சியாளர் சந்திக ஹதுரசிங்கே புலம்பியுள்ளார்.

வரும் வெள்ளியன்று பாகிஸ்தானுக்கு எதிராக பிரிஸ்டலில் இலங்கை மோதுகின்றனர், அதில் பிட்சும் பச்சையாக இருந்தால் இலங்கை நிச்சயம் ஏமாற்றமேயடையும்.

நியூஸிலாந்துக்கு எதிராக கிரீன் டாப் பிட்சில் இலங்கை மடிய ஆட்டம் மொத்தமே 45 ஓவர்கள்தான் நீடித்தது. நேற்று ஆப்கான் அணி கிரீன் டாப்பில் சரியாக வீசவில்லை இதனால் தொடக்க விக்கெட்டுக்காக 92 ரன்கள் எடுத்ததால் இலங்கை அணி நபியின் அபார ஓவரில் 3 விக்கெட்டுகளை கழற்றிய பிறகும் 201 ரன்களை எடுக்க முடிந்தது. பிறகு போராடி ஆப்கானை வீழ்த்தியது. ஆனால் இதே கிரீன் டாப் பிட்ச்தான் நேற்று ஆப்கானை வீழ்த்த இலங்கைக்கு உதவியது என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இல்லை.

இந்நிலையில் இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுரசிங்க தெரிவித்ததாவது:

நாங்கள் விளையாடிய இரண்டு பிட்ச்களுமே ஒருநாள் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்றது. மற்ற அணிகள் ஆடிய மற்ற போட்டிகளின் பிட்ச்களைப் பார்த்தால் கொஞ்சம் பிரவுன் அல்லது வெள்ளையாகக் கூட இருந்தது.  ஆனால் எங்களுக்கு மட்டும் கிரீன் டாப் பிட்ச்கள்.

ஆனாலும் அணி திடீரென சரிவடைந்ததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நல்ல ஸ்கோரில்தான் இருந்தோம். ஒரே ஒவரில் 3 விக்கெட், நிறைய தயக்கமான ஷாட்களை ஆடினோம்.

எங்களிடம் தன்னம்பிக்கை இல்லை. தொடக்கத்தில் பேட்ஸ்மென்கள் பதற்றமாக ஆடினர். அதனால் சில அவுட்கள் நிகழ்ந்தன. பிறகு ஒரு தற்கொலைக்குச் சமமான ரன் அவுட்.  நாங்கள்தான் அவர்கள் ஆட்டத்துக்குள் வர அனுமதித்தோம்.

இவ்வாறு கூறினார் ஹதுரசிங்க.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in