தொடர்ந்து 3வது முறையாக யு.எஸ்.ஓபன் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ்

தொடர்ந்து 3வது முறையாக யு.எஸ்.ஓபன் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ்
Updated on
1 min read

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து 3வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் மார்டினா நவ்ரதிலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் லாய்ட் என்ற டென்னிஸ் பெருந்தகைகள் பட்டியலில் செரினா இணைந்துள்ளார்.

மேலும் செரினா வில்லியம்ஸ் வெல்லும் 18வது கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் பட்டமாகும் இது.

முதல் செட்டில் இருவருமே தொடக்கத்தில் சற்று திணற கடைசியில் செரினாவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க 5-2 என்று முன்னிலை பெற்றார். ஆனால் 8வது சர்வ் கேமில் வோஸ்னியாக்கி செட் பாயிண்ட்டை முறியடித்தார். பிறகு செரினா வென்று 6-3 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார். இந்த செட்டில் வோஸ்னியாக்கிக்குக் கிடைத்தது ஒரேயொரு வின்னர்தான்.

பிறகு 2வது செட்டில் சர்வில் தனது முழுத்திறமையைக் காண்பித்து செரினா வில்லியம்ஸ் 5-3 என்று முன்னிலை பெற்று பிறகு 6-3 என்று வெற்றியைச் சாதித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

3 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையும் கோப்பையும் செரினாவுக்கு அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in