Last Updated : 29 Mar, 2018 03:21 PM

 

Published : 29 Mar 2018 03:21 PM
Last Updated : 29 Mar 2018 03:21 PM

வார்னருக்குப் பதில் சன் ரைசர்ஸ் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்

பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடைவிதிக்கப்பட்ட ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குப் பதிலாக வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்.

இது குறித்து வில்லியம்சன் கூறும்போது, “இந்த சீசனுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்கிறேன். திறமையான வீரர்கள் உள்ள அணியை வழிநடத்தக் கிடைத்த உற்சாகமான வாய்ப்பு, எதிர்வரவிருக்கும் சவால்களுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இப்போது ஒரேயொரு அயல்நாட்டு கேப்டன் தான். மீதி 7 அணிகளின் கேப்டன்கள் இந்திய வீரர்களே.

இதற்கிடையில் வார்னர் பற்றி கூறிய கேன் வில்லியம்சன், “நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் ஆடும்போது நேரங்களை ஒன்றாகச் செலவழித்திருக்கிறோம். வார்னர் மோசமான நபர் அல்ல.

சமீபத்திய நிகழ்வுகளில் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் கொஞ்சம் அதிகப்படியான உணர்ச்சி எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான சம்பவங்கள் மூலம்தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். உலகத்தரம் வாய்ந்த 2 வீரர்கள் இவ்வாறு தவறு செய்திருப்பது அவமானகரமானதுதான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x