Last Updated : 02 Mar, 2018 10:57 AM

 

Published : 02 Mar 2018 10:57 AM
Last Updated : 02 Mar 2018 10:57 AM

வாசிம் அக்ரமை அசத்திய பாக். இடது கை வேகப்பந்து வீச்சு சிறுவன்: வைரலான வீடியோ

தனது பயங்கரமான இன்ஸ்விங்கர்கள் மற்றும் யார்க்கர்களால் உலக முன்னணி பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்த வாசிம் அக்ரம் அசந்து போகும் வகையில் பாகிஸ்தான் சிறுவன் ஒருவர் தனது இடது கை வேகப்பந்து வீச்சுத் திறமையை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவில் அந்த இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் போலவே வீசியதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த வாசிம் அக்ரம் தன் ட்விட்டரில், “எங்கே இந்தப் பையன்? நம் நாட்டின் நரம்புகளினூடே புதிய திறமைகள் ஓடுகின்றன, இவர்களை கண்டுபிடித்துக் கொடுக்கும் சிறந்த நடைமேடை இல்லை. இதற்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தச் சிறுவனுக்கு 8 முதல் 10 வயதுதான் இருக்கும். இந்த வீடியோவில் இந்தப் பையன் ஒரேயொரு ஸ்டம்பை வைத்து இடது கை வேகப்பந்து வீச்சு வீசுகிறான்.

இந்த வீடியோ வெளியானதையடுத்து இந்தச் சிறுவனின் துல்லியம், வேகம், ஆக்ரோஷம் ஆகியவற்றைப் பார்த்து ரசிகர்கள் புல்லரித்துப் போயுள்ளனர். டேப் பந்தை இந்தச் சிறுவன் இன்ஸ்விங்கர் ஆக்சனில் வீசிய வீடியோ வைரலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x