பளுத்தூக்குதல் பிரிவில் வடகொரிய வீரர் உலக சாதனை

பளுத்தூக்குதல் பிரிவில் வடகொரிய வீரர் உலக சாதனை
Updated on
1 min read

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆடவர் பளுதூக்குதல் பிரிவில் வடகொரியா நாட்டைச் சேர்ந்த ஓம் யுன் சோய் என்ற வீர்ர் உலகசாதனை படைத்தார்.

ஆடவர் 56 கிலோ உடல் எடைப்பிரிவில் சோய், கிளீன் அண்ட் ஜெர்க் பளுதூக்குதல் பிரிவில் 170 கிலோ எடை தூக்கி உலக சாதனைக்குரியவரானார்.

இவர் இதற்கு முன்னால் இதே பிரிவில் 169 கிலோ எடைதூக்கி செய்த தனது சாதனையை இன்று முறியடித்தார். இதன் மூலம் வடகொரியா தனது முதல் தங்கம் வென்றுள்ளது.

இவர் 2012 ஒலிம்பிக் சாம்பியன் என்பதோடு, 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மொத்தமாக இவர் 298 கிலோ எடைதூக்கி புதிய ஆசிய சாதனையையும் படைத்தார்.

17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்சியானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் 14 பிரிவுகளில் சுமார் 150 வடகொரிய வீரர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in