Published : 13 Sep 2014 11:09 AM
Last Updated : 13 Sep 2014 11:09 AM

ஒலிம்பிக் வாய்ப்பை தவற விட்டார் ககன் நரங்

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஸ்பெயினின் கிரானடா நகரில் நடைபெற்று வரும் 51-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரோன் (தரையில் படுத்தபடி சுடுதல்) பிரிவில் பங்கேற்றார். இதில் மொத்தம் 124.2 புள்ளிகளை மட்டுமே பெற்ற நரங், 6-வது இடத்ற்குத் தள்ளப்பட்டார். இதனால் 2016-ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் இழந்தார். இப்போட்டியில் முதல் 5 இடங்களைப் பிடித்த வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றனர்.

இதேபோல 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் பிரகாஷ் நஞ்சப்பா 9-வது இடத்தை பிடித்தார். ஜீது ராய் 10-வது இடத்தை பிடித்ததால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவும் தகுதிச்சுற்றைத் தாண்டவில்லை.

இந்தியவைச் சேர்ந்த மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீரர் ஹரியோம் சிங், தகுதிச்சுற்றில் 45-வது இடத்தைப் பிடித்ததால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x