Published : 23 Mar 2018 08:46 AM
Last Updated : 23 Mar 2018 08:46 AM

சதம் விளாசினார் டீன் எல்கர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான டீன் எல்கர் சதம் விளாசினார்.

கேப்டவுன் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க மே அதிர்ச்சியாக இருந்தது. மார்க் ரம் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜோஸ் ஹசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹசிம் ஆம்லா 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். அவர், 95 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 128 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் (5), தெம்பா பவுமா (1), டி காக் (3) ஆகியோரை சீரான இடைவெளியில் கம்மின்ஸ் வெளியேற்றினார். விக்கெட்கள் சரிந்த நிலையிலும் சிறப்பாக விளையாடிய டீன் எல்கர் 178 பந்துகளில் சதம் அடித்தார். 79 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 117, பிலாண்டர் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x