Published : 05 Sep 2014 10:43 AM
Last Updated : 05 Sep 2014 10:43 AM

ஆசிய விளையாட்டு ஹாக்கி அணி அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணியே ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்கிறது. சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி வரும் 12-ம் தேதி தென் கொரியாவுக்கு புறப்படுகிறது.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி, இந்த முறை தனது முதல் ஆட்டத்தில் செப்.21-ம் தேதி இலங்கையையும், செப்.23-ம் தேதி ஓமனையும், செப்.25-ம் தேதி பாகிஸ்தானையும், செப்.27-ம் தேதி சீனாவையும் சந்திக்கிறது.

அணி விவரம்: கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (துணை கேப்டன்), தடுப்பாட்டம்: குர்பஜ் சிங், பைரேந்திர லகரா, ரூபிந்தர் பால் சிங், கோதாஜித் சிங், வி.ஆர்.ரகுநாத், நடுகளம்: தரம்வீர் சிங், சர்தார் சிங் (கேப்டன்), டேனிஸ் முஜ்தபா, சிங்லென்சனா சிங், மன்பிரீத் சிங், முன்களம்: ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், எஸ்.வி.சுனில், குருவிந்தர் சிங், நிகின் திம்மையா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x