உலக பளுதூக்குதல் ஜெயந்துக்கு தங்கம்

உலக பளுதூக்குதல் ஜெயந்துக்கு தங்கம்
Updated on
1 min read

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சுதாகர் ஜெயந்த்.

ஆடவர் 62 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற ஜெயந்த் கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 100 கிலோ எடையையும், ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையையும் தூக்கினார். இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் இவர் உலக மாஸ்டர்ஸ் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பின்லான்தின் ஹியூஸ் கோனன் ஜெர்ரி 170 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், பிரான்ஸின் ஃபிரெட்ரிக் ராபர்ட் 145 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in