கொல்கத்தா அணியில் மேமுனுல் இஸ்லாம்

கொல்கத்தா அணியில் மேமுனுல் இஸ்லாம்
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிக்காக களமிறங்குகிறார் வங்கதேச கேப்டன் முகமது மேமுனுல் இஸ்லாம்.

இதற்கான ஒப்பந்தம் வங்கதேச தலைநகர் டாக்காவில் சனிக்கிழமை கையெழுத்தானது.

ஐஎஸ்எல் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மிக முக்கியமான மைல்கல் என குறிப்பிட்ட மேமுனுல் இஸ்லாம், “எனது கனவு நனவாகியிருக்கிறது. முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்” என்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வங்கதேச அணிக்காக விளையாட விருக்கும் மேமுனுல், அந்த போட்டிக்குப் பிறகு கொல்கத்தா அணியுடன் இணைவார் என தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in