Published : 10 Mar 2018 11:12 AM
Last Updated : 10 Mar 2018 11:12 AM

சென்னை - கோவா மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரை இறுதியில் சென்னையின் எப்சி - எப்சி கோவா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு மோதுகின்றன. இந்த ஆட்டம் கோவாவில் உள்ள பெடோர்டா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த சீசனில் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இதற்கு கோவாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி பதிலடி கொடுத்து 1-0 என வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் ஐஎஸ்எல் வரலாற்றில் 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன.

இதில் ஒரு ஆட்டம் கூட டிராவில் முடிவடைந்தது இல்லை. 4 போட்டிகளில் கோவா அணியும், 5 போட்டிகளில் சென்னை அணியும் வெற்றி பெற்றிருக்கிறது.இந்த 9 மோதல்களிலும் 35 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் கோவா அணி ஹாட்ரிக் வெற்றியுடன் அரை இறுதியில் கால்பதித்துள்ளது. சென்னை அணி இந்த சீசனில் வெளியூர் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 11 வெவ்வேறு வீரர்கள் நடப்பு சீசனில் கோல்களை அடித்துள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தை சென்னையின் எப்சி அணி நம்பிக்கையுடன் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x