Published : 21 Mar 2018 08:59 AM
Last Updated : 21 Mar 2018 08:59 AM

2-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி

இந்தியா ஏ மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி 20 பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை பார்போர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி நேற்று மீண்டும் இந்திய அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 85 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக வனிதா 40, அருந்ததி ரெட்டி 10 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான கேட்டி ஜார்ஜ் 3 ஓவர்களை வீசி 6 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்த நிலையில் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். எளிதான இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. எனினும் அந்த அணி 20 ஓவர்கள் முழுமையாக பேட் செய்து 210 ரன்கள் குவித்தது. ஷிவெர் 54, டேனியல் வயாட் 46, பீமண்ட் 31, எமி ஜோன்ஸ் 21, ஆலிஸ் 26 ரன்கள் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x