Published : 01 Mar 2018 04:05 PM
Last Updated : 01 Mar 2018 04:05 PM

இந்தியாவுக்கு எதிராக பாடம் கற்றுக் கொண்டேன்; வேகப்பந்து சாதக ஆட்டக்களமா? வேண்டவே வேண்டாம்: டுபிளெசிஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வேகப்பந்து வீச்சு ஆட்டக்களம் கேட்க மாட்டேன் என்றும், இந்திய தொடரில் பாடம் கற்றுக் கொண்டதாகவும் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் கூறியுள்ளார்.

டர்பனில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 91/2 என்று ஆடி வருகிறது. இதற்கான பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே அமைந்துள்ளது.

இதற்கான காரணத்தை போட்டிகு முன்பு டுபிளெசிஸ் கூறினார்:

நான் பாடம் கற்றுக் கொண்டேன். துணைக்கண்ட அணிகளை எதிர்த்து ஆடும்போது வேகப்பந்து ஆட்டக்களம் கொண்டு சாதகபலன்களை அனுபவிக்க முயற்சி செய்வோம், ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அப்படியல்ல, எங்கள் இரு அணிகளுமே கிட்டத்தட்ட ஒத்த அணிகளே.

இருவரும் இதே பிட்ச் உள்ளிட்ட சூழலில் ஆடிப் பழக்கப்பட்ட அணிகள். வித்தியாசமான எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. என்ன அமைக்கப்படுகிறதோ அதில் ஆடுவோம். நாங்கள் இப்படிப்பட்ட பிட்ச்தான் வேண்டும் என்று இம்முறை கேட்கவில்லை.

டர்பன் பிட்ச் நாளைடைவில் மந்தமான பிட்ச் ஆகிவிட்டது. இந்த முறையும் மந்தமாகவே செயல்படும். டென்னிச் பந்து பவுன்ஸ் இருக்கும். ஸ்பின் கொஞ்சம் எடுக்கும்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

இந்தியாவுக்கு எதிராக டுபிளெசிஸ் முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து சாதக ஆட்டக்களம் அமைத்து முதல் நாளிலேயே 12/3 என்று பரிதவித்தது தென் ஆப்பிரிக்க அணி பிறகு டிவில்லியர்ஸின் அதிரடி, கேசவ் மஹராஜ், பிலாண்டர் ஆகிய பின்கள வீரர்களின் பங்களிப்புடன் டீசண்டான ரன் எண்ணிக்கையை எட்டி இந்திய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் போராடி வென்றது. பும்ரா, புவனேஷ்வர் குமாரை ஆட முடியவில்லை.

உடனடியாக 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் இருப்பது போன்ற ஆட்டக்களம் அமைக்கப்பட விராட் கோலியின் அருமையான 153 ரன்களுடன் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியாக இருந்திருக்க வேண்டியது, கோலி, ரவிசாஸ்திரியின் மவுட்டிகமான தேர்வு முடிவுகளினால், அதாவது புவனேஷ்வர்குமாரை வேண்டுமென்றே நீக்கினார், ரஹானேயை முதல் 2 போட்டிகளுக்கு எடுக்கவில்லை. இதனால் தொடரை இழக்க நேரிட்டது. பிறகு 3வது போட்டியிலும் வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம் போடப்பட்டது அதில் இந்திய அணி வென்றது. ஆக டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாறு படைத்திருக்கும், காரணம் வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம்.

இதனையடுத்தே தான் பாடம் கற்றுக் கொண்டதாக டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x