Published : 15 Mar 2018 08:47 AM
Last Updated : 15 Mar 2018 08:47 AM

வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு ‘மேஜிக்கல்’ - பாராட்டில் வள்ளலான ரோஹித் சர்மா

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக பவர் பிளெயில் 3 வங்கதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழ்மழையில் நனைத்தார்.

4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் சுந்தர்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு ரோஹித் சர்மா கூறியதாவது:

டாஸில் நான் கூறியது போல் நான் பார்முக்கு வருவது முக்கியம். 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம், முடிவு ஓவர்களில் வங்கதேசம் நன்றாக வீசினர்.

வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு தொடக்கத்தில் மேஜிக்கல். புதிய பந்தில் ஸ்பின்னர்கள் வீசுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் வாஷிங்டன் அதில் சிறப்பாகத் திகழ்ந்தார், அவருக்கு ஹேட்ஸ் ஆஃப். பிட்ச் வழக்காமானது கிடையாது பந்து பிட்சில் நின்று வந்தது, எனவே பந்து வரும் திசையில் நேராக அடிப்பது சற்று கடினம்.

புதிய பேட்ஸ்மென்கள் வந்து செட் ஆவது இந்தப் பிட்சில் கடினம் எனவேதான் நிதானித்து பிறகு அடிக்க முடிவெடுத்தேன். ரெய்னா ‘டெரிஃபிக்’ பார்மில் உள்ளார், இறுதியிலும் அவர் இப்படி தொடர்வார் என்று நம்புகிறோம்.

வாஷிங்டன் சுந்தர் என்னிடமிருந்து பந்தை எடுத்துக் கொண்டு சென்று வீசும் அளவுக்கு தைரியம்படைத்தவர். பந்தை தூக்கி வீசுவதிலும் தைரியமானவர். தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் சுந்தர் தெளிவானவர்.

பவுலர் ஒருவருக்கு தனக்கு என்ன பீல்ட் வேண்டும் என்று முடிவெடுக்க முடிகிறது என்றால் அது அந்தத் தனிநபரைப் பற்றி அதிகம் நமக்குத் தெரிவிப்பதாக அமைகிறது, வாஷிங்டன் சுந்தர் அத்தகையவர்.

மொகமது சிராஜ் இந்தப் போட்டியில் ரன்களைக் கொடுத்துள்ளார் ஆனால் அவர் ஒரு கிரேட் டேலண்ட்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x