Published : 27 Mar 2018 10:30 AM
Last Updated : 27 Mar 2018 10:30 AM

தங்கம் வென்றார் இந்தியாவின் அனிஷ்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்கப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா 29 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.

சீன வீரர்களான ஷெங் ஜிப்ஷெங் 27 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், ஜூமிங் 23 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

இதே பிரிவில் அனிஷ் பன்வலா, ஜவான்டா, ஆதர்ஷ் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி குழு பிரிவில் அதிக புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

சீன அணி 1733 புள்ளிகள் குவித்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது. சாந்து, ஜப்தேசிங் ஜாஸ்பால், மன்தீப் சிங் ஆகியோரை உள்ளிடக்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

இந்தியா 2-ம் இடம்

இந்தியா இந்தத் தொடரில் 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 15 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அதேவேளையில் சீனா 7 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x