Published : 26 Sep 2014 06:50 PM
Last Updated : 26 Sep 2014 06:50 PM

சேலை வியாபாரி முதல் ஒட்டக மேய்ப்பர் வரை: ட்விட்டரில் கலக்கும் ஃபெடரர் போட்டோஷாப் ஜாலம்

டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் இந்தியத் தெருக்களில் சேலை விற்பதை, இந்திய ரயிலில் தொங்கிக் கொண்டுச் செல்வதை நீங்கள் பார்த்ததுண்டா? ஃபோட்டோஷாப் உதவியினால் இதெல்லாம் சாத்தியமாகியுள்ளது.

ரோஜர் ஃபெடரர் வரும் டிசம்பர் மாதம், சர்வதேச டென்னிஸ் லீக் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வரவுள்ளார். அதையொட்டி, "இந்தியாவில் உள்ள என் ரசிகர்களிடம் இருந்து ஓர் உதவி தேவைப்படுகிறது. டெல்லியில் சில நாட்கள் தங்கவுள்ளேன். அனைத்து அற்புதமான இடங்களையும் பார்க்க இயலாது.

எனவே நான் எங்கெல்லாம் செல்லாம் என நினைக்கிறீர்களோ அதை #PhotoshopRF என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி சொல்லுங்கள். சிறந்த புகைப்படங்களை நான் ரீட்வீட் செய்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபெடரர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஃபெடரர் இருப்பதைப் போன்ற ஃபோட்டோஷாப் படங்கள் ட்விட்டரில் குவிய ஆரம்பித்தன. ஃபெடரர் ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகங்களை மேய்ப்பது போல, ட்ரக் ஒன்றை ஓட்டுவது போல, தாஜ்மகால் முன் நின்று போஸ் கொடுப்பதை போல விதவிதமான படங்கள் பெருக, ஃபெடரரும் சிறந்த படங்களை ரீட்வீட் செய்து பகிர ஆரம்பித்துள்ளார்.

இதன் எதிர்வினைகள் குறித்து கூறும்போது, " >#PhotoshopRF மூலம் வந்த படங்கள் அனைத்தும் என்னை வியக்க வைத்துள்ளன. சிரிக்க வைத்துள்ளன" என்று ஃபெடரர் கூறியுள்ளார்.

மேலும், "சிறந்தது எது என தேர்ந்தெடுப்பது கடினமாக இருப்பதாகவும், ஆனால் சிறந்த படங்களின் தொகுப்பை வைத்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x