Published : 28 Mar 2018 11:01 AM
Last Updated : 28 Mar 2018 11:01 AM

முதல் அடி: தன் ஸ்பான்சரை இழந்தார் டேவிட் வார்னர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எழுந்த பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சையின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் வார்னர்தான் என்று செய்திகள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில் அவருக்கு இனி ஸ்பான்சர் செய்ய மாட்டோம் என்று எல்.ஜி.ஆஸ்திரேலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கே ஸ்பான்சர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது இந்த பந்தைச் சேதப்படுத்தி மோசடி செய்த சர்ச்சை, ஆஸ்திரேலிய மக்கள், ஊடகங்கள் கடும் கோபாவேசமாகியுள்ளனர்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா மூன்று வீரர்களுக்கும் தக்க தண்டனை வழங்கவில்லையெனில் ஸ்பான்சர்களை இழக்க நேரிடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் முதல் அடியாக எல்.ஜி. ஆஸ்திரேலியா நிறுவனம் டேவிட் வார்னருடன் ஸ்பான்சர்ஷிப்பை தொடர வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

ஃபேர்பேக்ஸ் மீடியாவுக்கு எல்.ஜி.நிறுவனம் தெரிவிக்கும் போது, “டேவிட் வார்னருடனான எல்.ஜி.யின் ஸ்பான்சர்ஷிப் அதன் இறுதி வாரங்களில் உள்ளது. சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை.

எல்.ஜி.ஆஸ்திரேலியா எப்போதும் எங்களது முக்கிய மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்ளும் தூதர்களுடன் மட்டுமே பணியாற்ற விரும்புகிறது. இந்த ஸ்பான்சர் உறவுகளை நாங்கள் மிகவும் பொறுப்புடன் அணுகுகிறோம்” என்று தெரிவித்துள்ளது

ஸ்பான்சரின் இந்த முடிவு வார்னருக்கு விழுந்த முதல் அடியாகும். கேரி நிகோல்ஸ், ஆசிக்ஸ் போன்ற நிறுவனங்களும் வார்னரின் ஸ்பான்சர்களாவர், இவர்களும் வார்னருடனான உறவுகளை முறித்துக் கொள்வார்களா என்பது போகப்போகத் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x