Last Updated : 10 Mar, 2018 11:14 AM

 

Published : 10 Mar 2018 11:14 AM
Last Updated : 10 Mar 2018 11:14 AM

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் அஞ்சும் மவுத்கில்

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மெக்சிக்கோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவின் இறுதிப் போட்டியில் பலத்த காற்றுக்கிடையே அஞ்சும் மவுத்கில் 454.2 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் 8-வது பதக்கமாக இது அமைந்தது. சீனாவின் ருஜியாவோ 455.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், மற்றொரு சீன வீராங்கனையான டிங் சன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆடவர் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 7-வது இடமும், நீரஜ் குமார் 13-வது இடமும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். பதக்கப்பட்டியலில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்லகத்துடன் முதலிடம் வகிக்கிறது. சீனா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடம் வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x