ஆஸி. பவுலருக்கு ‘ஸ்லோ’ பந்துகளை வீசக் கற்றுக் கொடுத்த லஷித் மலிங்கா

ஆஸி. பவுலருக்கு ‘ஸ்லோ’ பந்துகளை வீசக் கற்றுக் கொடுத்த லஷித் மலிங்கா
Updated on
1 min read

எதிரணிக்கு தோனி மட்டும்தான் அறிவுரை வழங்குகிறார் என்பதல்ல, அனைவருமே தனக்குத் தெரிந்ததை சக வீரர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஒரு திறந்த மனப்பான்மை இந்தக் காலத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.

என்ன.. சில ஆளுமைகள் எது செய்தாலும் செய்தியாகிவிடும் சில பேர் செய்வது வெளியில் வராமலே போய் விடும். இது அந்தந்த காலக்கட்ட சூழ்நிலையைப் பொறுத்தது.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இந்த உலகக்கோப்பையில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறார். அதுவும் ஐபிஎல் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசியாக வீசிய அந்த ஸ்லோயர் ஒன் இன்று வரை பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் ஆஸி. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கு மலிங்கா பந்து வீச்சு தந்திரங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சவுத்தாம்டனில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இலங்கையை எளிதாக வென்றது, ஆனால் ஸ்டாய்னிஸ் அந்தப் போட்டி முடிந்தவுடன் மலிங்காவிடம் சில பல உத்திகளை கற்றுக் கொண்டார், குறிப்பாக பேட்ஸ்மென்களை நிலைகுலையச் செய்து ஏமாற்றும் ஸ்லோ பந்துகள், விரல் மூலம் வீசும் நக்குள் பந்து ஆகியவற்றை மார்கஸ் ஸ்டாய்னிஸ் கற்றுக் கொண்டார்.

ஜூன் மாதம் 15ம் தேதி இலங்கையும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பைப் போட்டியில் மோதுகின்றனர், இந்நிலையில் மலிங்கா, எதிரணி வீரருக்கு தன்னுடைய ஆயுதங்கள் சிலவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை சொல்லிக்கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் வேர்ல்ட் கப் என்ற ட்விட்டர் பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in