Published : 17 May 2019 07:50 PM
Last Updated : 17 May 2019 07:50 PM

மார்க் உட் பந்தில் அடிவாங்கிய இமாம் உல் ஹக்; அலறித் துடித்து வெளியேறினார்: உ.கோப்பை வாய்ப்பு சிக்கலில்

நாட்டிங்காமில் இன்று (வெள்ளி) பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை தொடரின் 4வது போட்டியில் எதிர்த்து ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் பட்லர் முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார்.

 

இயன் மோர்கனுகு ஒரு போட்டி விளையாடத் தடை விதிக்கப்பட்டதால் பட்லர் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ளார்.

 

இதனையடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்ய இறங்கியது, இதில் தொடக்க வீரராக கடந்த போட்டியில் 151 ரன்கள் விளாசிய இமாம் உல் ஹக் இறங்கினார். 4வது ஓவரை மார்க் உட் வீசிய போது  பந்து ஒன்று ஷார்ட் பிட்ச் ஆக இமாம் உல் ஹக் அதனை புல் ஷாட் ஆட முயன்றார்.

 

ஆனால் பந்து மட்டையில் சிக்காமல் முழங்கையில் ‘பச்’ என்று வந்து அறைந்தது, அது சரியான அடியாகிப் போனது. அடிப்பட்டவுடன் வலியால் துடித்த இமாம் உல் ஹக் மட்டையை தூக்கி எறிந்து ஸ்கொயர் லெக் திசை நோக்கிச் சென்று அங்கு கீழே விழுந்தார்.  அவர் சரியான வலியில் இருந்தது அவர் துடித்ததைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது.

 

இதனையடுத்து மைதானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் கடைசியில் ரிட்டையர்டு ஆகி வெளியேறினார், அவர் எடுத்த ரன்கள் 3.

 

உலகக்கோப்பை தொடங்க இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் முக்கிய தொடக்க வீரர் இமாம் உல் ஹக் இவ்வாறு காயமடைந்திருப்பது அவரது உலகக்கோப்பை வாய்ப்புகளை சந்தேகத்திடமாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

 

எலும்பு முறிவு ஏதாவது இருக்கிறதா என்பது ஸ்கேன் செய்த பிறகே தெரியவரும். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சற்று முன் வரை 32 ஓவர்களில் 181/6 என்று ஆடிவருகிறது பாபர் ஆஸம் ‘ஆ ஸம்’ ஆக ஆடிவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x