Published : 15 May 2019 09:42 AM
Last Updated : 15 May 2019 09:42 AM

நம்புகிறோம்...வாட்ஸன் நீகேப்தான் எங்களின் கப்: சிஎஸ்கே அணி புகழாரம்

காலில் ரத்தம் சொட்ட, சொட்ட களத்தில் போராடிய ஷேன் வாட்ஸன் முழங்காலில் அணிந்திருந்த 'நீகேப்' தான் எங்களின் கோப்பை என்று சிஎஸ்கே அணி புகழாரம் சூட்டியுள்ளது.

ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 12-வது ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்கார் ஷேன் வாட்ஸன் 59 பந்துகளில் 80 ரன்களைச் சேர்த்துதான் ஆட்டம் பரபரப்பாக நகர முக்கியக் காரணமாக அமைந்தது. அதிலும் கடைசி நேரத்தில் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஆட்டத்தை வெற்றிவரை கொண்டு சென்றது.  ஆனால், ஷேன் வாட்ஸன் தனது காலில் ரத்தகாயத்துடன் தான் விளையாடினார் என்பதை ஹர்பஜன் சிங் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

வாட்ஸன் ரன் ஓடியபோது விழுந்ததால் அவரின் இடது முழங்காலில் ரத்தம் சொட்டியது. அந்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல், முதலுதவி கூட எடுத்துக்கொள்ளாமல் வாட்ஸன் விளையாடியுள்ளார். வாட்ஸன் ஆட்டமிழந்து வந்தபின் அவருக்கு இடது முழங்காலில் 6 தையல்கள் போடப்பட்டன  என்று மிகவும் உருக்கமாக ஹர்பஜன் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, வாட்ஸனின் அர்ப்பணிப்பான பேட்டிங், அணியின் மீதான பற்றை ரசிகர்கள் பாராட்டி, புகழந்து வருகின்றனர்.

ஏராளமானோர் வாட்ஸனுக்கு வாழ்த்துத் தெரிவித்து, நெகிழ்ச்சியுடன் அவரை புகழ்ந்து வருகின்றனர். கோப்பையை வாங்காவிட்டாலும் பராவாயில்லை, வாட்ஸன் போன்ற வீரர்கள் சிஎஸ்கேவுக்கு கிடைத்திருக்கிறார்கள். சிஎஸ்கே ஒரு குடும்பம் என்றெல்லாம் உணர்ச்சிகரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் உணர்ச்சிபெருக்கில் வெளியிட்டுவரும் கருத்தைப் பார்த்த சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் நன்றி தெரிவித்து, வாட்ஸனுக்கு புகழாரம் சூட்டியுள்லது. அதில் " சிஎஸ்கே ரசிகர்களே உங்களின் உணர்ச்சிப்பெருக்கான வார்த்தைகள், எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு ஆகியவை எங்களை ஒரு விஷயத்தை நம்பச் செய்கிறது. வாட்ஸன் 'நீகப்'தான் எங்களுடைய கப்(கோப்பை)!ஷேன்வாட்ஸனுக்கு விசில்போடுங்க" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்விட்டுக்கு ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் ரிட்வீட்டும், 20-க்கும் மேற்பட்டோர் லைக்கும் செய்துள்ளன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x