

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி கண்டார். இதனால் அவர் வெண்கலப் பதக்கத்தோடு வெளியேற நேர்ந்தது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரை யிறுதியில் சிந்து 17-21 16-21 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வி கண்டார். கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா, இப்போது உலக பாட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.