

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரபூர்வ பாடலை ஐசிசி இன்று வெளியிட்டது.
"ஸ்டான்ட் பை" (“Stand By”)என்ற தலைப்பில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் லாரின் என்பவரால் இந்த அதிகாரபூர்வ பாடல் பாடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கோடைக் காலத்தில் நடக்கும் கிரிக்கெட் தொடர்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் ஆகியோர் கலந்து ஆலோசித்து இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பைப் போட்டி உலகெங்கிலும் இருந்து 10 லட்சம் ரசிகர்களை இங்கிலாந்துக்கு ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.