wooden spoon - கோலி தலைமை ஆர்சிபி-யை விமர்சித்த விஜய் மல்லையா

wooden spoon - கோலி தலைமை ஆர்சிபி-யை விமர்சித்த விஜய் மல்லையா
Updated on
1 min read

ஐபிஎல் 2019-ல் நட்சத்திர வீரர்களான ஏ.பி.டிவில்லியர்ஸ், ஸ்டாய்னிஸ், அதிரடி மன்னன் ஹெட்மையர் ஆகியோர் ஆக்ரோஷமான கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆடியும் கடைசி இடம் பிடித்தது குறித்து விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார்.

ஆனால் கோலியின் பதிவுக்கு ‘ஏமாற்றத்துடன்’ ஆர்சிபி அணியின் ஆரம்பகால உரிமையாளர் விஜய் மல்லையா மற்றொரு பதிவை இட்டுள்ளார்.

விராட் கோலி தன் பதிவில், “கடைசி 7 போட்டிகளில் 5இல் வெற்றி கண்டோம். ஒரு போட்டி முடிவு வரவில்லை. இது நாம் பெருமைப்படுவதற்கு உரியதே” என்று தன்னம்பிக்கையுடன் ஒரு பதிவை இட்டார்.

இதற்கு விஜய் மல்லையா தன் பதிவில் ஆர்சிபி அணியை wooden spoon என்று வர்ணித்தார், அதாவது  ‘வுட்டன் ஸ்பூன்’ என்றால் எந்த ஒரு பந்தயத்திலும் கடைசியில் வரும் அணி அல்லது வீரருக்கு அளிக்கப்படும் ஒருவிதமான கற்பனையான இழி பரிசாகும். அதாவது வடிவேலு ஒரு காமெடி காட்சியில், ‘ஒரு வெங்கலக் கிண்ணம் கூட உனக்குக் கிடையாது’ என்பாரே அது போல் ஆங்கிலத்தில் கடைசியாக வந்தவருக்கு மரக்கரண்டிதான் என்ற வழக்கு உள்ளது போலும். இதைக் குறிப்பிட்டு விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார்.

மல்லையா தன் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:

“எப்போதும் பெரிய லைன் - அப் துயரகரமாக காகிதத்தில் மட்டுமே.. வுட்டன் ஸ்பூன் பரிசினால் உடைந்து போனேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி 2019 ஐபிஎல் கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்து மேலே வர முடியாமல் கடைசி அணியாகத் தேங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in