Last Updated : 17 May, 2019 08:52 AM

 

Published : 17 May 2019 08:52 AM
Last Updated : 17 May 2019 08:52 AM

இன்னும் 13 நாள்: 500 ரன்கள் குவிக்கப்படுமா?

இங்கிலாந்தில் உள்ள மைதானங்களில் நடை பெறும் கிரிக்கெட் போட்டி களில் ரசிகர்களுக்கு ஸ்கோர்கார்டு விற்பனை செய்யும் பழக்கம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. போட்டி நிறை வடைந்ததும் இந்த ஸ்கோர் கார்டை ஒரு பவுண்ட் அல்லது இரு பவுண்ட் கொடுத்து ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த ஸ்கோர்கார்டு ரசிகர்களின் அடையாள சின்னமாக பார்க்கப் பட்டு வருகிறது.

வழக்கமாக இந்த ஸ்கோர் கார்டு 400 ரன்களுக்குரிய தாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக இங்கிலாந்து மைதானங்களில் சராசரியாக 350 ரன்களும், அதிகபட்சமாக 480 ரன்கள் வரையிலும் குவிக்கக்கூடிய நிலைமை உள் ளது. இதனால் உலகக் கோப்பை தொடரில் ரசிகர்களுக்கு வழங்கப் படும் ஸ்கோர்கார்டை 500 ரன் களுக்குரியதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்றி அமைக் கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி டாம் ஹாரிஸன் கூறுகையில், “இந்த முறை ரசிகர்களுக்கு வழங்கப் படும் ஸ்கோர் கார்டை 500 ரன்களுக்குரிய கார்டுகளாக வழங்க முடிவு செய்துள்ளோம். 50 ஓவர்கள் போட்டியில் இந்த முறை ஒரு இன்னிங்ஸில் நிச்சயம் 500 ரன்கள் எட்டப்படும் என்று நம்புகிறோம்.

முதலில் பேட் செய்யும் அணியின் இலக்கை 2-வது பேட் செய்யும் அணி விரட்டிச் செல்லும் வகையில் போட்டித் தொடர் இருக்கும். இந்த முறை உலகக் கோப்பை ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்தாக அமை யும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x