Last Updated : 15 May, 2019 01:55 PM

 

Published : 15 May 2019 01:55 PM
Last Updated : 15 May 2019 01:55 PM

மீண்டும் வருகிறார் விருதிமான் சாஹா; மே.இ.தீவுகள் செல்லும் இந்திய ஏ அணியில் இடம்: தினேஷ் கார்த்திக் நிலை?

தோள்பட்டை காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள விருதிமான் சாஹா, மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய 'ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் தொடர் முடிந்த பின் மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான அதிகபட்ச சாத்தியங்களுடன் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இந்திய ஏ அணி, வரும் 25-ம் தேதி இலங்கை செல்கிறது. அந்நாட்டு ஏ அணியுடன் இரு 4 நாள் போட்டியிலும், 5 ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. அதன்பின் ஜூலை 11-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்லும் இந்திய ஏ அணி அந்நாட்டு ஏ அணியுடன் மூன்று 4 நாள் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இந்தப் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் நேற்று அறிவித்தார். இதில் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்று 4 நாட்கள் போட்டியில் விளையாடும் இந்திய ஏ பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பந்துவீச்சில் நவ்தீப் சைனி, ஆவேஷ் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், மே.இ.தீவுகளில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது இடம் பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.

இதில் மூன்று 4 நாட்கள் போட்டிகளுக்கும் இந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியத் தொடரில் விக்கெட் கீப்பிங் பணியை பார்த்த ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக காயத்தில் இருந்து மீண்டுவந்த விருதிமான் சாஹா, கே.எஸ். பரத் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலத்துக்குப் பின் அணிக்குத் திரும்பிய தினேஷ் கார்த்திக் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றுவந்த நிலையில் விர்திமான் சாஹா அணிக்குள் வரும்போது, அவருக்கான இடத்துக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக மணிஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் பணியிலும், பேட்டிங்கிலும் விருதிமான் சாஹா சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்குள் மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.

இலங்கை ஏ அணியுடன் இரு 4 நாட்கள் போட்டியில் விளையாடும் இந்திய ஏ அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக பி.கே.பஞ்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மே.இ.தீவுகள் செல்லும் இந்திய 'ஏ' அணி(ஒருநாள் தொடர்)

மணிஷ் பாண்டே(கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், குர்னல் பாண்டியா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அகமது, ஆவேஷ் கான்.

4 நாட்கள் போட்டிக்கான இந்திய 'ஏ' அணி விவரம்:

ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்), பி.கே.பஞ்சால், ஏ.ஆர்.ஈஸ்வரன், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, சிவம் துபே, விருதிமான் சாஹா, கே.எஸ்.பரத், கே.கவுதம், எஸ். நதீம், மயங்க் மார்கண்டே, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான்.

இலங்கை ஏ அணியுடன் 4 நாள் போட்டியில் விளையும் இந்திய 'ஏ' அணி :

இஷான் கிசன் (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், ரிதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, ரிக்கி புகி, சுப்மான் கில், சிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் வாரியர், இஷான் போரல், பிரசாந்த் சோப்ரா

ஒருநாள் போட்டிக்கான இந்திய 'ஏ' அணி விவரம்:

பி.கே.பஞ்சால் (கேப்டன்), ஏ.ஆர்.ஈஸ்வரன், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி  புகி, சித்தேஷ் லாட், ரிங்கு சிங், சிவம் துபே, கே.எஸ்.பரத், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், சர்வதே, சந்தீப் வாரியர், அங்கித் ராஜ்புத், இஷான் போரல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x