Published : 11 May 2019 07:49 AM
Last Updated : 11 May 2019 07:49 AM

டுபிளேசிஸ், வாட்சனே இறுதி வரை நின்று முடித்திருக்க வேண்டும்: வெற்றிக்குப் பிறகு தோனி கருத்து

மீண்டுமொருமுறை சிஎஸ்கே அணி தோனி தலைமையில் தன் அனுபவத்தையும் திறமையையும் காட்டி எந்த வித முனைப்பும் இல்லாமல் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி 8வது ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தன்னை தகுதிபடுத்திக் கொண்டது.

 

நிச்சயம் இந்த முழுநிறைவான வெற்றி நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிஎஸ்கே அணி மீதான ஒரு பயத்தை உருவாக்கியிருக்கும். எளிதாக வெற்றி பெற்ற முந்தைய ஆட்டங்கள் போல் இறுதிப்போட்டி மும்பை இந்தியன்ஸுக்கு அமையாது. காரணம் தோனி படை நேற்று அதியற்புதமாக அனைத்து விஷயங்களிலும் சிறப்புற்றது.

 

டெல்லியின் அதிரடி பேட்டிங் வரிசையில் பிரிதிவி ஷா, ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரை கட்டுப்படுத்தி கடும் நெருக்கடியில் வீழ்த்தி அந்த அணியை 147 ரன்களுக்கு மட்டுப்படுத்தி  பிறகு டுபிளெசிஸ், வாட்சன் கூட்டணி 10.2 ஒவர்களில் 82 ரன்கள் என்று டெல்லி கேப்பிடல்ஸ் கனவிலிருந்து போட்டியை வெகுதூரம் கொண்டு செல்ல இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே ஆடிய சிறந்த போட்டியாக இது அமைந்தது.

 

ஆனால் நல்ல தொடக்கத்துக்குப் பிறகு டுபிளெசிஸ், வாட்சனே ஆட்டத்தை நோ-லாஸ் என்பதாக முடித்திருக்க வேண்டும் என்கிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

 

ஆட்டம் முடிந்து அவர் கூறியதாவது:

 

இதுதான் வழக்கமாக இறுதிக்கு வரும் வழி, கடந்த ஆண்டு ஒரு விதிவிலக்கு. இந்தப் போட்டியில் வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட விதம் அபாரமானது. இலக்கை விரட்ட ஆடிய பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

ஆட்டத்தை 7.30 மணிக்குத் தொடங்குவதால் பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். சீக்கிரம் தொடங்குவதால் பிட்ச் பராமரிப்பாளர்கள் அதிகம் தண்ணீர் விட்டிருக்க வாய்ப்பிருக்கிறது, இதனால் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் கூடுதல் சாதகமாக இருந்தது. நாங்கள் சரியான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.

 

ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் பலமானது. மேலும் அவர்களிடம் இடது கை பேட்ஸ்மென்களூம் இருந்தனர். மைதானமும் சிறியது எங்களிடம் இடது கை ஸ்பின்னர் இருந்தார். அவர்கள் பொறுமை காத்திருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை விக்கெட்டுகளை சரியான இடைவெளிகளில் எடுத்ததே.

 

ஒரு கேப்டனாக என்ன தேவை என்றுதான் கூற முடியும். மற்றபடி அவர்கள்தான் எப்படி வீசுவது என்பதை வகுக்க வேண்டும். பவுலர்கள் அந்த விதத்தில் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த சீசன் முழுதுமே நாங்கள் இந்த இடத்தில் இருக்க பவுலர்கள் பிரதான காரணம்.

 

இலக்கை விரட்டும்போது தொடக்க நிலைகளைக் கடந்த பிறகே டுபிளேசிஸ், வாட்சன் இருவருமே முடித்து விட்டு வந்திருக்க வேண்டும்.  தேவைப்படும் ரன் விகிதத்தை 6 ரன்களுக்கும் குறைவாகக் குறைத்து விட்டு பெரிய ஷாட்களை ஆடி அவுட் ஆக வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன், அவர்களே முடித்து விட்டு வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x