Last Updated : 22 May, 2019 02:01 PM

 

Published : 22 May 2019 02:01 PM
Last Updated : 22 May 2019 02:01 PM

அழகான பெண் போன்று இருந்தார்: ஸ்டூவர்ட் பிராடுடன் முதல் சந்திப்பு; ஆன்டர்ஸன் சுவாரஸ்யத் தகவல்

நீலநிறக் கண்களும், பறக்கும் தலைமுடியுடனும் பார்த்தபோது அழகான பெண் போன்று இருந்தார் என்று ஸ்டூவர்ட் பிராட் குறித்து இங்கிலாந்து வீரர் ஆன்டர்ஸன் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்

சக வீரர் ஸ்டூவர்ட் பிராடை முதல் முறையாகச் சந்தித்தபோது அவர் பார்க்க அழகான பெண் போன்று இருந்தார் என்பதை தனது புத்தகக்தில் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இல்லாத இன்றைய அணி வலுவிழந்த அணியாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் இருவரும் சேர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செயல்பட இருவரின் பந்துவீச்சு முக்கியமாகும்.

அதிலும் பிராட், ஆன்டர்ஸன் ஆகியோரின் ஸ்விங் பந்துவீச்சு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள வேகப்பந்துவீச்சு மைதானங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டெஸ்ட் போட்டிகளில் ஆன்டர்ஸன் 575 விக்கெட்டுகளையும், பிராட் 437 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெக்ராத், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ் ஆகியோருக்கு அடுத்த இடங்களில் இருவரும் உள்ளனர்.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ஜேம்ஸ் ஆன்டர்ஸன், "பவுல், ஸ்லீப், ரிப்பீட்"(“Bowl. Sleep. Repeat.”) என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இதில் ஸ்டூவர்ட் பிராட் குறித்து புகழ்ந்தும், நகைச்சுவையாகவும் எழுதியுள்ளார்.

தன்னுடைய புத்தகம் குறித்து ஆன்டர்ஸன் கூறுகையில், "எங்கள் இருவருக்கும் இடையே இதுவரை போட்டியே வந்தது இல்லை. ஏனென்றால், இருவரின் திறமையும் வேறு வேறு. இருவரும் சேர்ந்து 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறோம். பேட்ஸ்மேன்களுக்கு நல்ல பவுன்ஸர் வீசி பிராட் திணறவைக்கும் நேரத்தில், நான் பந்துகளை ஸ்விங் செய்து மிரட்டுவேன்.

கடந்த 2007-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் ஸ்டூவர்ட் பிராடைச் சந்தித்தேன். அந்த டெஸ்ட்டில்தான் ஸ்டூவர்ட் அறிமுகமாகினார்.

முதல் முறையாக ஸ்டூவர்ட் பிராட் ஓய்வறைக்குள் நடந்து வந்தபோது, அவரின் பறக்கும் முடியையும், நீலநிறக் கண்களையும் பார்த்தபோது பெண்ணைப் போன்று இருந்தார். உடனே நான் கடவுளே. இந்தப் பெண்  இவ்வளவு அழகா என்று நினைத்துக்கொண்டேன். அதன்பின்தான் அது ஸ்டூவர்ட்  பிராட் என்ற வீரர் எனத் தெரிந்து நான் ஏமாற்றம் அடைந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டி முடிந்த பின் ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஆஷஸ் கோப்பையில் இருவரும் கலக்க இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x