

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முகமது சமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அக்தர் கூறியுள்ளது: உலகக் கோப்பையை மனதில் வைத்து சமி, உமேஷ், ஆரோன் ஆகியோருக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும் பட்சத்தில் பந்து வீச்சில் இந்திய அணி வலுவாக உருவெடுக்கும்.
அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இது உலகக் கோப்பைக்கு அவர்கள் சிறப்பாக தயாராக உதவும். எனினும் உலகக் கோப்பை நெருங்கிய பிறகு அவர்கள் அதிகம் விளையாடாமல் தங்கள் உடல் தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் இந்திய பந்துவீச்சு சிறப்பாக இருக்காது. ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. முக்கியமாக சமி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசுகிறார் என்றார்.