மந்தமான ஆட்டத்துக்கு விலை கொடுத்த ராஜஸ்தான்: கொல்கத்தா அபார வெற்றி

மந்தமான ஆட்டத்துக்கு விலை கொடுத்த ராஜஸ்தான்: கொல்கத்தா அபார வெற்றி
Updated on
1 min read

ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 13.5 ஓவர்களிலேயே ஆட்டைத்தை முடித்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் இணைந்து அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 91 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர்.

நரைன் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கிறிஸ் லின் அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே வெளியேறினார். ஆனால் இவர் ஆட்டமிழக்கையில் தேவைப்பட்டதோ 55 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே. அடுத்து களத்தில் இருந்த உத்தப்பாவும், ஷுப்மன் கில்லும் இணைந்து எளிதில் இலக்கை எட்டினர்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே ரன் சேர்க்க தத்தளித்தது. ரஹானே இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லரும், ஸ்டீவன் ஸ்மித்தும் செர்ந்து சீராக ரன் சேர்க்க ஆரம்பித்தாலும் அது ஐபிஎல் வழக்கபடி அல்லாமல், ஒரு நாள் போட்டியைப் போலவே இருந்தது.

smith-ptijpgஅரை சதம் அடித்த ஸ்மித் | படம்: பிடிஐ

பத்தாவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதற்குப் பிறகும் அந்த அணியால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. பட்லர் சற்று அதிரடியாக ஆடலாம் என முயற்சித்தாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 12-வது ஓவரில் 37 ரன்களுகு பட்லர் பெவிலியன் திரும்பினார்.

பந்துவீச்சில் ஒரு பக்கம் பியூஷ் சாவ்லாவும், இன்னொரு பக்கம் சுனில் நரைனும் சேர்ந்து இன்னும் ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினர். இப்படியான சூழலிலும் ஸ்மித் 44 பந்துகளில் அரை சதம் எட்டினார். 16-வது ஓவரில், பொறுத்தது போதும் என திரிபாதி பொங்கி எழ முயற்சிக்க அவர் தூக்கி அடித்த பந்து கேட்ச் ஆனது.

அடுத்து ஸ்டோக்ஸ் களமிறங்கி, அவர் பங்குக்கு சிறிது நேரம் சமாளித்தார். 20 ஓவர்கள் முடிவில்  3 விக்கெட்டுகளை மட்டுமே ராஜஸ்தான் இழந்திருந்தாலும் 139 ரன்களை மட்டுமே அந்த அணியால் சேர்க்க முடிந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 36 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தது மட்டுமே அந்த அணிக்கு ஒரே ஆறுதல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in