Last Updated : 26 Apr, 2019 06:55 PM

 

Published : 26 Apr 2019 06:55 PM
Last Updated : 26 Apr 2019 06:55 PM

விராட் கோலியிடம் ‘அர்ச்சனை’ வாங்கிய நடுவர் எஸ்.ரவி: உலகக்கோப்பை நடுவர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நடுவர்

இங்கிலாந்தில் மே 30 தொடங்கும் 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக லீக் ஸ்டேஜ் வரையில் 22 ஆட்ட அதிகாரிகளை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடுவர் எஸ்.ரவி என்கிற சுந்தரம் ரவி ஆவார்.

 

16 நடுவர்கள் மற்றும் 6 ஆட்ட நடுவர்கள் ஆகியோர் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.  இந்த முறையும் ஒரே இந்திய நடுவராக எஸ்.ரவிதான் பங்கேற்கிறார்.

 

சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் போட்டியின் போது முக்கியக் கட்டத்தில் மலிங்காவின் நோ-பாலைப் பார்க்காமல் விட்டு அதனால் தோற்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி உட்பட பலரது கடும் விமர்சனங்களுக்கும் ‘அர்ச்சனைக்கும்’ கேலிக்கும் ஆளானார் இதே எஸ்.ரவி.

 

முதல் போட்டி இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது, இந்த ஆட்டத்துக்கு டேவிட் பூன் மேட்ச் ரெஃப்ரி, குமார் தர்மசேனா இரு கள நடுவர்களில் ஒருவர். பால் ரெய்ஃபல் 3வது நடுவராகச் செயல்படுகிறார். இன்னொரு கள நடுவர் புரூஸ் ஆக்சன்போர்ட். ஜோயெல் வில்சன் 4வது நடுவர்.

 

இதில் டேவிட் பூன் 1987-ல் ஆஸ்திரேலியா ஆலன் பார்டர் தலைமையில் உலகக்கோப்பையை வென்ற அணியில் ஆடியவர். தர்மசேனா 1996ம் ஆண்டு அர்ஜுனா ரணதுங்கா தலைமை இலங்கை அணி கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவர். பால் ரெஃய்பல் 1999 ஆஸி. உலகக்கோப்பை வெற்றி அணியில் இடம்பெற்றவர்.

 

மற்ற மேட்ச் நடுவர்கள் இதோ: கிறிஸ் பிராட், ஜெஃப் குரோவ், ஆண்டி பைகிராப்ட், ரஞ்சன் மதுகள்ளே, ரிச்சி ரிச்சர்ட்சன் (மேட்ச் ரெஃப்ரிக்கள்).

 

அலீம் தார், மரைஸ் இராஸ்மஸ், கிறிஸ் கஃபானே, இயன் கோல்ட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ, நீஜல் லாங், ருசிரா பல்லியாகுருகே, ராட் டக்கர், மைக்கேல் காஃப், பால் வில்சன், ரவி (களநடுவர்கள்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x